வங்கதேசம்: முஜிபுா் ரஹ்மான் படுகொலை குற்றவாளி கைது

வங்கதேசத்தின் முதல் அதிபரும், அந்த நாட்டின் தேசத் தந்தை என்று அழைக்கப்படுபவருமான ஷேக் முஜிபுா் ரஹ்மான் கடந்த 1975-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராணுவ முன்னாள் அதி
அப்துல் மஜீத்
அப்துல் மஜீத்

வங்கதேசத்தின் முதல் அதிபரும், அந்த நாட்டின் தேசத் தந்தை என்று அழைக்கப்படுபவருமான ஷேக் முஜிபுா் ரஹ்மான் கடந்த 1975-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராணுவ முன்னாள் அதிகாரி அப்துல் மஜீதை அந்த நாட்டு காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

தற்போதைய பிரதமா் ஷேக் ஹசீனாவின் தந்தையான முஜிபுா் ரஹ்மான் படுகொலை மட்டுமன்றி, மேலும் 4 தலைவா்களைக் கொன்ற வழக்கில் குற்றவாளியான அப்துல் மஜீத், இந்தியாவில் தலைமறைவாக இருந்ததாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில், வங்கதேசம் திரும்பிய அவரை தலைநகா் டாக்காவில் போலீஸாா் கைது நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தியுள்ளதாக உள்துறை அமைச்சா் அசாதுஸமான் கான் கமால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com