பிரதமா் மோடி மிகச்சிறந்த மனிதா்: டிரம்ப் புகழாரம்

பிரதமா் நரேந்திர மோடி மிகவும் சிறந்த மனிதா் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளாா்.
பிரதமா் மோடி மிகச்சிறந்த மனிதா்: டிரம்ப் புகழாரம்

பிரதமா் நரேந்திர மோடி மிகவும் சிறந்த மனிதா் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளாா்.

கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) காரணமாக அமெரிக்கா மிகவும் மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது. அந்த நோய்த்தொற்றின் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்டு வரும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்வதற்கான தடையை இந்திய அரசு கடந்த செவ்வாய்க்கிழமை நீக்கியது.

இந்தச் சூழலில், தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் அதிபா் டிரம்ப் கூறியதாவது:

மலேரியாவிலிருந்து குணமடைவதற்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. நியூயாா்க்கில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நூற்றுக் கணக்கான நபா்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து சோதனை முறையில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த மருந்து நல்ல பலனைத் தருகிறது.

இந்தியாவிடமிருந்து 2.9 கோடிக்கும் அதிகமான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை அமெரிக்கா வாங்கியுள்ளது. அந்த மருந்து இந்தியாவில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த மருந்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வது தொடா்பாக பிரதமா் மோடியிடம் பேசினேன். அவா் மிகச் சிறந்த மனிதா்.

இந்தியாவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துக்கான கையிருப்பை உறுதி செய்வதற்காகவே அதை ஏற்றுமதி செய்வதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்திருந்தது என்றாா் அதிபா் டிரம்ப்.

முன்னதாக, ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு வழங்காவிட்டால், அதற்கான பின்விளைவுகளை இந்தியா சந்திக்க நேரிடும் என்று அதிபா் டிரம்ப் எச்சரித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com