பிறந்து 23 நாளே ஆன குழந்தை கரோனாவுக்குப் பலி: பிலிப்பின்ஸில் அதிர்ச்சி

பிலிப்பின்ஸில் பிறந்து 23 நாள் ஆன பச்சிளம் குழந்தை கஜானாவுக்குப் பலியான சம்பவம்..
பிறந்து 23 நாளே ஆன குழந்தை கரோனாவுக்குப் பலி: பிலிப்பின்ஸில் அதிர்ச்சி

மணிலா: பிலிப்பின்ஸில் பிறந்து 23 நாள் ஆன பச்சிளம் குழந்தை கரோனாவுக்குப் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

உலகையே உலுக்கி வரும் கரோனா நோய்த்தொற்று 200 நாடுகளுக்குப் பரவியுள்ள நிலையில், இதுவரை 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைப்  பலிவாங்கியுள்ளது.

இந்நிலையில், பச்சிளம் குழந்தையையும் விட்டுவைக்கவில்லை இந்த கொடிய தொற்று நோயான கரோனா  வைரஸ்.

பிலிப்பின்ஸில், மணிலாவிலிருந்து 70 கி.மீ. தெற்கே அமைந்துள்ள லிபா என்ற நகரத்தில் கரோனா தொற்று பாதித்து கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி பச்சிளம் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. குழந்தை உயிரிழந்த பிறகே அதற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. 

இதற்கு முன்னதாக பிறந்து நான்கு நாளே ஆன குழந்தை கரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் சுவாசக் கோளாறு காரணமாக பிரேசிலில் புதன்கிழமை உயிரிழந்தது. அதேபோன்று, பொலிவியாவில் 5 மாதமான குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. 

அந்நாட்டில், வியாழக்கிழமை இரவு வரை 4,706 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 203 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் 124 குணமடைந்துள்ளனர். 

நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட லூசோன் தீவில் கடந்த மார்ச் 17ஆம் தேதி கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதன்பின்னர், பல இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டது. 

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த, பிலிப்பின்ஸின் ஜனாதிபதி ரோட்ரிகோ டூர்ட்டே கடந்த திங்களன்று 57 மில்லியன் மக்கள் வசிக்கும் லூசோன் தீவு முழுவதும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் ஏப்ரல் 12 வரை ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com