புதிய சகாப்தத்தில் சீனாவின் தேசிய பாதுகாப்பு

இராணுவம் என்பது ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான விசயமாக மட்டும் அல்லாமல் அது அந்த நாட்டின் வலிமையை எடுத்துக்காட்டுவதாகவும் இருக்கும்.
புதிய சகாப்தத்தில் சீனாவின் தேசிய பாதுகாப்பு
புதிய சகாப்தத்தில் சீனாவின் தேசிய பாதுகாப்பு

இராணுவம் என்பது ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான விசயமாக மட்டும் அல்லாமல் அது அந்த நாட்டின் வலிமையை எடுத்துக்காட்டுவதாகவும் இருக்கும். பொதுவாக ஒவ்வொரு நாட்டின் இராணுவத்திற்கும் தனிச்சிறப்பும் பெருமை மிகுந்த வரலாறும் இருப்பது இயல்பு.

எந்த இராணுவ சீர்திருத்தத்தையும் ஒரே இரவில் அடைந்துவிட முடியாது., இராணுவ விவகாரங்களில் ரகசியம் காப்பதோடு அதன் சீர்திருத்தங்களின் செயல்திறனை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிப்பது, இராணுவ வளர்ச்சித் திறனை செயல்படுத்துதல், வலிமையை கூட்டுதல் போன்றவற்றுக்கு அதிக நடைமுறைகளும் பல்வேறு நடவடிக்கைகளும் தேவை.

அந்த வகையில் சீனாவின் பி.எல்.ஏ என்று அழைக்கப்படும் மக்கள் விடுதலை இராணுவத்தின் வரலாறு, சீர்திருத்தம் மற்றும் புதுமைகளின் வரலாறு ஆகும். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் அது பெரியதாகவும், வலுவானதாகவும் வளர்ந்துள்ளது.

1927 ஆம் ஆண்டில் இராணுவம் நிறுவப்பட்டதிலிருந்து இன்று வரை பல கோட்பாடுகள் மற்றும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப கட்டமைப்பு மற்றும் கொள்கை தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தி புதிய சகாப்தத்தில், சீனா பாதுகாப்பு மற்றும் இராணுவ நவீனமயமாக்கல், தேசிய பாதுகாப்பு மற்றும் ஆயுதப் படைகள் என அனைத்து வகையிலும் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, இராணுவ விவகாரங்களில் புரட்சி மற்றும் தேசிய பாதுகாப்பின் கோரிக்கைகள். ஆயுதப்படைகளை வலுப்படுத்துவதில் புதிய வரலாற்று முன்னேற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

நவம்பர் 2015 இல் தேசிய பாதுகாப்பு மற்றும் ஆயுதப்படைகளின் சீர்திருத்தத்தை கையில் எடுத்த சீன அதிபர் ஷிச்சின்பிங் ஒரு அணிதிரட்டல் உத்தரவை பிறப்பித்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. இந்த 5 ஆண்டு காலத்தில் சீன மத்திய இராணுவ ஆணையத்தின் செயல்பாட்டு உறுப்புகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன, சேவைகள் மற்றும் ஆயுதங்களுக்கான தலைமை மற்றும் மேலாண்மை முறையை மேம்படுத்தியுள்ளனர், கூட்டு செயல்பாட்டு முறையை உருவாக்கி மேம்படுத்தியுள்ளனர், மேலும் சட்ட அடிப்படையிலான மேற்பார்வை முறையை உருவாக்கி மேம்படுத்தியுள்ளனர்.  மேலும் சீன ராணுவ சீர்திருத்தம் குறித்து அனைவரும் தெளிவாக அறியும் வண்ணம் சீன அதிபர் பல முறை நேரில் சென்று ஆய்வு செய்ததோடு, இராணுவ வீர்ர்களிடம் தன் அன்பை வெளிப்படுத்தி, அவர்களின் மதிப்பை உயர்த்திக் காட்டினார். 

மேலும் தென் சீனாவின் ஹைனான் மாகாணத்தின் சன்யாவில் உள்ள ஒரு கடற்படை துறைமுகத்தில் 2019 டிசம்பரில் சீனாவில் கட்டப்பட்ட முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஷான்டோங்கின் கமிஷனிங் விழாவில் ஷி கலந்து கொண்டார்.

ஷி விமானம் தாங்கிக் கப்பலில் ஏறி, காவலர்களுக்கு உரிய மதிப்பளித்து உள் உபகரணங்களையும் பரிசோதித்து, கேரியர் சார்ந்த விமானிகளின் பணி மற்றும் வாழ்க்கை குறித்து கேட்டார்.

விமானம் தாங்கி கட்டுமானத்தில் சீனாவின் சாதனைகளைப் பாராட்டிய ஷி, கட்சி மற்றும் மக்களின் சேவையில் புதிய பங்களிப்புகளைச் செய்வதற்கான முயற்சிகளைத் தொடர அதிகாரிகள் மற்றும் வீரர்களை ஊக்குவித்தார்.

ஜூலை 2020 இல் வடகிழக்கு சீனாவின் ஜிலின் மாகாணத்தை ஆய்வு செய்தபோது, ​​விமானப்படையின் விமானப் பல்கலைக்கழகத்தில் ட்ரோன் தொழில்நுட்பத்திற்கான ஆய்வகத்தை ஷி பார்வையிட்டார்.

ட்ரோன் இயக்க முறைமைகளுக்கான கற்பித்தல் வசதிகளை ஆய்வு செய்த அவர், ட்ரோன் ஆபரேட்டர்களுக்கு பயிற்சி அளிப்பது பற்றியும் அறிந்து கொண்டார். ஆளில்லா போர் குறித்த ஆராய்ச்சியை வலுப்படுத்துவது, ட்ரோன் கல்வியை ஒரு ஒழுக்கமாக மேம்படுத்துதல், உண்மையான போர் நிலைமைகளில் பயிற்சியை முடுக்கி விடுதல் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தக்கூடிய தொழில் வல்லுநர்களை வளர்க்க வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார்

அதோடு மட்டும் இல்லாமல் ஒருமைப்பாட்டை ஆதரித்து  ஊழலுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து தேசிய பாதுகாப்பிற்காக நவீனமயமாக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் தொடர்பான அமைப்பை நிறுவி இராணுவக் கொள்கைகள் மற்றும் நிறுவனங்களை மேம்படுத்துதல் மற்றும் ஊக்குவித்தல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க  சாதனைகள் புரிந்திருப்பதும் சீனாவின் ராணுவ தினமான இந்நாளில் நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com