அறிவியலுக்குக் கட்டுப்பாடு வேண்டாமே?

ஹுவாவெய் உலக அளவில் இந்த வார்த்தை பிரபலம். அதற்கு, இந்நிறுவனத்தின் அயரா முயற்சியும்,
அறிவியலுக்குக் கட்டுப்பாடு வேண்டாமே?
அறிவியலுக்குக் கட்டுப்பாடு வேண்டாமே?

ஹுவாவெய் உலக அளவில் இந்த வார்த்தை பிரபலம். அதற்கு, இந்நிறுவனத்தின் அயரா முயற்சியும், நன்கு திட்டமிடுதலும், புதுப்புது தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருவதும்தான் காரணம்.

சீனாவின் நட்சத்திர நிறுவனங்களுள் ஒன்றாகவும் இது உள்ளது. அதனாலேயே என்னவோ, இந்நிறுவனம் அதிக எதிர்ப்புகளை எதிர்கொண்டு வருகிறது. எதிர்ப்பு என்று கூறுவதை விட, இந்நிறுவனத்தின் வளர்ச்சி கண்டு மற்ற நாடுகள் மற்றும் நிறுவனங்கள் பொறாமை  கொண்டுள்ளன என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். அதிலும், வளர்ந்த நாடான அமெரிக்காவின் பொறாமை அப்பட்டமாகவே தெரிகிறது.

பள்ளிக்கூட மாணவர்களைப் போல அமெரிக்கா நடந்து கொள்வது நகைப்புக்குரியதாக உள்ளது. பொறாமையை மறைப்பதற்கு ‘தேசியப் பாதுகாப்பு’ என்ற கவசத்தை அமெரிக்கா கையில் எடுத்துக் கொண்டது. சரி, தனக்குப் பிடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஹூவாவெய்யின் 5ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று மற்ற நாடுகளை அமெரிக்க மிரட்டி வருவதை எப்படி ஏற்க முடியும். 

“5ஜி தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்காக ஹுவாவெய் நிறுவனத்தைத் தேர்வு செய்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்,” என்று பிரேசிலுக்கு பிரேசிலில் உள்ள அமெரிக்கத் தூதர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனநயாக ரீதியில் தேர்வு செய்யப்பட்டுள்ள பிரேசில் அரசு, ‘என்ன செய்ய வேண்டும்,’ ‘என்ன செய்யக் கூடாது,’ என்று அமெரிக்கா கூறுவது மிகவும் அபத்தமாக உள்ளது.

இதன்மூலம் எப்படியாவது, ஹுவாவெய்யின் வளர்ச்சியையும் சீனாவின் வளர்ச்சியையும் தடுத்துவிட வேண்டும் என்று அமெரிக்கா செயல்பட்டு வருவது வெள்ளிடை மலை போலத் தெளிவாகத் தெரிகிறது. அமெரிக்கா கூறும், “ஹூவாவெய், தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்,” என்பது மிகவும் போலித்தனமானது. 

கடந்த 30 ஆண்டுகளில் 170-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 1,500 பிணையங்களை கட்டியமைத்து அவற்றின் வளர்ச்சிக்கு ஹூவாவெய் துணை புரிந்துள்ளது. ஆனால், இணையக் குற்றம், தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று எந்தவிதமான கரைகளும் இந்நிறுவனத்தின் மீது படிந்திருக்கவில்லை. ‘நேர்மையாக, ஜனநாயக ரீதியில் நடந்து கொள்ள வேண்டும்,’ என்று பிற நாடுகளுக்குப் பாடம் எடுத்துவரும் அமெரிக்கா, வளர்ந்து வரும் நாடுகளிடம் அவ்வாறு நடந்து கொள்வதில்லை. அமெரிக்காவின் செயல்பாடு நகைமுரணாக உள்ளது.

“ஹுவாவெய் நிறுவனத்தின்மீது அமெரிக்கா வஞ்சகம் காட்டுவதற்கு, அதன் வளர்ச்சி மட்டும் காரணம் அல்ல. அது, சீனாவின் மிகப் பெரிய நட்சத்திர நிறுவனம் என்பதுதான்,” என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வங் வென்பின் தெரிவித்தார். அமெரிக்காவுக்கு ஹுவாவெய் நிறுவனம் அடிபணியவில்லை. அமெரிக்காவின் தடை குறித்து ஹூவாவெய் நிறுவனத்தின் நிறுவனர் ரென் ஜெங்ஃபெய் கூறுகையில், “மேற்கு இல்லை என்றால் என்ன, இன்னும் கிழக்கு உள்ளது. அங்கு தொழில் நடத்துவேன்,” என்ற கூற்றை நினைவுகூர்வது சரியாக இருக்கும். 

மலரின் வாசனையை எப்படித் தடுக்க முடியும்? அப்படித்தான், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஒரு நாட்டினால் தடுத்துவிட முடியாது. அது, காற்று போல, அனைவரையும் சென்றடைந்து விடும். அதுதான் அறிவியல் வளர்ச்சியின் நோக்கமாக இருக்க வேண்டும். முந்தைய காலத்திலிருந்து தற்போதுவரை புதுப்புது கண்டுபிடிப்புகளில் ஈடுபடும் அறிவியலாளர்கள் எவரும் சுயநலத்துடன் செயல்பட்டது கிடையாது. புதுக் கண்டுபிடிப்புகள் உலக மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதுதான் அவர்களின் நியாயமான ஆசை. 

ஒருவன் வளர்ந்து வருகிறான், நம்மை முந்திக் கொண்டு ஓடுகிறான் என்றால் அது அவனுடைய விடா முயற்சியினால் கிடைத்தது. அவனை முதுகில் தட்டிக்கொடுத்து ஊக்கம் அளிக்க வேண்டும்தானே தவிர, தலையில் கொட்டி கீழே அமிழ்த்தக் கூடாது. பொறாமை குணம் நம்மை அழித்து விடும் என்பதை சில நாடுகள் மனதில் கொள்ள வேண்டும்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com