நியூஸ் கார்ப் தலைமைக் குழுவில் இருந்து பதவி விலகினார் ஜேம்ஸ் முர்டோச்

நியூஸ் கார்ப் தலைமைக் குழுவில் இருந்து ஜேம்ஸ் முர்டோச் பதவி விலகியதாக ஊடக நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 
நியூஸ் கார்ப் தலைமைக் குழுவில் இருந்து பதவி விலகினார் ஜேம்ஸ் முர்டோச்
நியூஸ் கார்ப் தலைமைக் குழுவில் இருந்து பதவி விலகினார் ஜேம்ஸ் முர்டோச்


நியூஸ் கார்ப் தலைமைக் குழுவில் இருந்து ஜேம்ஸ் முர்டோச் பதவி விலகியதாக ஊடக நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 

நியூஸ் கார்ப்-பின் தலையங்க உள்ளடக்கம் தொடர்பான கருத்து வேறுபாட்டினால், தலைமைக் குழுவில் இருந்து ஜேம்ஸ் முர்டோச் பதவி விலகியதாகக் கூறப்படுகிறது.

ராபெர்ட் முர்டோச் உருவாக்கிய ஊடக சாம்ராஜ்ஜியத்துடன் அவரது இளைய மகனான ஜேம்ஸ் முர்டோச் கொண்டிருந்த கடைசி தொடர்பும் இதன் மூலம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸின் மூத்த சகோதரர் லாச்லன் போக்ஸ் கார்ப்பரேஷனுக்கு தலைமை வகித்து வருகிறார்.

இது குறித்து வெள்ளிக்கிழமை ஜேம்ஸ் முர்டோச் எழுதிய பதவி விலகல் கடிதத்தில், நியூஸ் கார்ப் நிறுவனத்தின் செய்திகளில் வெளியாகும் தகவல்கள் மற்றும் அந்நிறுவனம் எடுத்த பிற கொள்கை முடிவுகளில் முரண்பட்டிருப்பதால், நிறுவனத்தில் இருந்து விலகுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

முர்டோச் குடும்பத்தின் இதர ஊடக நிறுவனங்களாக போக்ஸ் கார்ப் உள்ளது. இது போக்ஸ் நியூஸ் மற்றும் போக்ஸ் ஒளிபரப்பு குழுவின் பேரன்ட் நிறுவனமாகும். 

47 வயதாகும் ஜேம்ஸ் முர்டோச், 88 வயதாகும் ராபெர்ட் முர்டோச்சின் 4வது பிள்ளையாவார். நியூஸ் கார்ப் நிறுவனத்தை நிறுவிய ராபெர்ட் முர்டோச் மிகப்பெரிய கோடீஸ்வரர்.  இவரது மூத்த மகன் லாச்லன் முர்டோச் (48), ராபெர்ட் முர்டோச்சின் வெளிப்படையான வாரிசாகக் கருதப்படுகிறார்.

சகோதரர்கள் இருவருக்கு இடையே இருக்கும் கருத்துவேறுபாடே, இந்த பதவிவிலகலுக்குக் காரணமாக இருக்கக் கூடும் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com