அமெரிக்கா: குடில் சுற்றுலா சென்ற 200-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கரோனா

ஜார்ஜியாவில் இரவு நேர குடில் சுற்றுலா சென்ற 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.

ஜூன் 23-ம் தேதி குடில் சுற்றுலாவில் பங்கேற்றிருந்த இளம் வயது ஊழியர்கள் சிலர், உடல் வெப்பநிலையில் மாறுபாடு இருப்பதால், அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டனர். அப்போது அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் ஜூன் 24-ம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, உடனடியாக குடில் சுற்றுலாவில் இருந்தவர்களை வீட்டுக்கு அனுப்புமாறு சுகாதாரத் துறை தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து மூன்று நாள்கள் அந்த சுற்றுலா செயல்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 600 பேர் பங்கேற்ற அந்த குடில் சுற்றுலாவில், ஒரு குடிலில் 26 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது இவர்களில் 260 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் 6 - 10 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் ஆவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com