அமெரிக்காவிலும் டிக்டாக் தடை? : அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவில் சீன நாட்டு செயலியான டிக்டாக்கை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் டிக்டாக் செயலி தடை?
அமெரிக்காவில் டிக்டாக் செயலி தடை?

அமெரிக்காவில் சீன நாட்டு செயலியான டிக்டாக்கை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் சீன பொழுதுபோக்கு செயலியான டிக்டாக் நிறுவனம் உளவு மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அந்த செயலி தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கல்வான் தாக்குதலைத் தொடர்ந்து டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் தடைசெய்யப்பட்டன. பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக இந்தத் தடை விதிக்கப்படுவதாக இந்திய அரசு தெரிவித்தது. இது சர்வதேச அளவில் முக்கிய கவனத்தைப் பெற்றது.

அமெரிக்காவும் இந்தியாவின் இந்த நடவடிக்கையை வரவேற்றது. மேலும் பல்வேறு நாடுகளும் டிக்டாக் செயலிக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெற உள்ள அதிபர் பதவிகான தேர்தலில் டிக்டாக் செயலி உளவு பார்த்து சீனாவிற்கு உதவ வாய்ப்பிருப்பதாக குடியரசுக் கட்சி செனட் சபை உறுப்பினர்கள் புகார் தெரிவித்திருந்தனர். இதுகுறித்துப் சனிக்கிழமை பேசிய அதிபர் ட்ரம்ப், “பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பு 24 மணி நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் அமெரிக்காவில் டிக்டாக் செயலியை வாங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு டிக்டாக் மற்றும் சீன நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com