சீனா: தொற்று நோய் மற்றும் வெள்ளத் தடுப்பில் படைவீரர்களின் பங்களிப்பு

மிக அன்பான நபர்கள் மற்றும் மக்களின் வீரர்கள் என பெருமை பெற்ற அவர்கள், நாடு மற்றும் மக்களைக் காக்கும் முக்கிய சக்தியாகத் திகழ்கின்றனர்.
தொற்று நோய் மற்றும் வெள்ளத் தடுப்பில் படைவீரர்களின் பங்களிப்பு
தொற்று நோய் மற்றும் வெள்ளத் தடுப்பில் படைவீரர்களின் பங்களிப்பு

மிக அன்பான நபர்கள் மற்றும் மக்களின் வீரர்கள் என பெருமை பெற்ற அவர்கள், நாடு மற்றும் மக்களைக் காக்கும் முக்கிய சக்தியாகத் திகழ்கின்றனர்.

கரோனா வைரஸை எதிர்த்து போராடுவதிலும், வெள்ளப்பெருக்கைத் தடுப்பதிலும், சீன மக்கள் விடுதலைப் படைவீரர்கள் ஈடுபட்டுள்ளனர். வெளிநாட்டிலே ஐ.நா. அமைதிக் காப்புக் கடமைகளில் பங்கேற்று வரும் அவர்கள், உலகின் அமைதியைப் பேணிக்காக்கும் உறுதியான ஆற்றலாக விளங்குகின்றனர்.

ஜூலையில் தென் சீனாவில் பல நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்ததால்,  கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சீன மக்கள் விடுதலைப் படைவீரர்கள், ஆயுதக் காவல்துறையினர் என 33ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், ஆன் ஹுய் மாநிலத்தில் வெள்ளத் தடுப்பில் ஈடுபட்டு, மக்களின் உயிர் மற்றும் உடமைகளை இயன்ற முயற்சியுடன் பேணிக்காத்தனர்.

மேலும், 1992ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி, ஐ.நா.வின் கோரிக்கைக்கு ஏற்ப,  சீனா 400க்கும் மேலான படைவீரர்கள் அடங்கிய பொறியியல் பணிக்குழு  ஒன்றை அனுப்பியது.  ஐ.நா. அமைதி காப்பு நடவடிக்கையில் கலந்து கொள்ளும் விதமாக சீன அரசு முதன்முறையாக இந்தப் படைப் பிரிவை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

உலகின்  அமைதியை உருவாக்கவும், உலகின் வளர்ச்சிக்கு பங்களிப்பை வழங்கவும், சர்வதேச ஒழுங்குமுறையைப் பேணிக்காக்கவும், சீனா எப்போதுமே செயல்பட்டு வருகிறது. அதே போல்,  உலகின் அமைதியைப் பேணிக்காக்கும் சக்தியாக சீனப் படை விளங்கி வருகிறது. சர்வதேச ராணுவப் பரிமாற்ற ஒத்துழைப்பு மேற்கொண்டு, உலகளாவிய பாதுகாப்பு அறைகூவல்களைக் கூட்டாக சமாளிக்க சீனப் படை வழக்கம் போல செயல்பட்டு வருகிறது என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தெரிவித்துள்ளது நினைவுகூரத்தக்கது.

தகவல்-சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com