2 மாத காலத்திற்குப் பிறகு பூமிக்குத் திரும்பிய விண்வெளி வீரர்கள்

இரண்டு மாத கால சர்வதேச விண்வெளி ஆய்வு மைய ஆய்வுக்குப் பிறகு அமெரிக்க விண்வெளி வீர்ர்கள் பூமிக்குத் திரும்பினர்.
பாராசூட் மூலம் நீரில் இறங்கிய விண்வெளி வீரர்கள்
பாராசூட் மூலம் நீரில் இறங்கிய விண்வெளி வீரர்கள்

இரண்டு மாத கால சர்வதேச விண்வெளி ஆய்வு மைய ஆய்வுக்குப் பிறகு அமெரிக்க விண்வெளி வீர்ர்கள் பூமிக்குத் திரும்பினர்.

அமெரிக்காவின் இரண்டு விண்வெளி வீரர்கள் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஏவுதளத்திலிருந்து நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ்ஸின் ”டிராகன்” விண்கலத்தின் மூலம் கடந்த மே மாதம் 31ஆம் தேதி பன்னாட்டு விண்வெளி மையத்தை நோக்கி சென்றனர். 

2 மாத காலமாக அங்கு தங்கி ஆய்வு மேற்கொண்ட நாசாவின் ராபர்ட் பெஹன்கென் மற்றும் டக்ளஸ் ஹர்லி ஆகிய விண்வெளி வீரர்கள் ஆய்வு முடிந்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி பூமியை நோக்கி புறப்பட்டனர்.

விண்வெளி ஆராய்ச்சியில் முக்கியத்துவம் பெற்ற இவர்களின் வருகை அறிவியல் உலகில் முக்கியக் கவனம் பெற்றது. 17500 மைல் வேகத்தில் பறக்கத் துவங்கிய டிராகன் விண்கலம் படிப்படியாக வேகம் குறைக்கப்பட்டு இறுதியாக  15 மைல் வேகத்தில் பூமியில் வந்திறங்கியது.

பன்னாட்டு விண்வெளி மையத்திலிருந்து 21 மணி நேரப் பயணத்திற்குப் பின் மெக்சிகோவின்  பென்சாகொலா கடலில் பாராசூட் மூலம் நீரில் இறங்கினர். பின் அவர்கள் கப்பல் மூலம் கடலில் இருந்து அழைத்து வரப்பட்டனர். இதனையடுத்து விண்கலனிலிருந்து வீரர்கள் வெளியேற்றப்பட்டனர்.

அமெரிக்காவில் நாசா அமைப்பு விண்வெளி வீரர்களை கடலில் இறக்கி பூமிக்கு அழைத்து வந்திருப்பது 45  ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும்.                                

பன்னாட்டு விண்வெளி மையத்திலிருந்து பூமி வரையிலான அவர்களின் பயணத்தை நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் அமைப்பினர் தீவீரமாக கவனித்து வந்தனர். பூமிக்கு வந்திறங்கிய விண்வெளி வீரர்களுக்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த வெற்றி தனியார் விண்வெளி நிறுவனம் மூலம் விண்வெளிக்கு மனிதர்கள் அழைத்துச் செல்லப்பட்டு வருவதற்கு தூண்டுதலாக அமையும் என ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

"மிகவும் வெற்றிகரமான இரண்டு மாத பயணத்திற்குப் பிறகு நாசா விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்புவது மிகவும் நல்லது.அனைவருக்கும் நன்றிகள்." என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com