சீனா உலகின் மிகப்பெரிய மொபைல் விளையாட்டு சந்தை!

விளையாட்டு என்றதுமே நமக்கு நமது குழந்தைப் பருவம் தான் நினைவுக்கு வரும்.
சீனா உலகின் மிகப்பெரிய மொபைல் விளையாட்டு சந்தை!

விளையாட்டு என்றதுமே நமக்கு நமது குழந்தைப் பருவம் தான் நினைவுக்கு வரும். நாம் குழந்தைகளாக இருந்த போது, விளையாடிய விளையாட்டுக்கள் இப்போது நமக்கு மறந்து போயிருந்தாலும் அந்த பசுமையான நினைவுகள் நம் நினைவில் இன்றும் நிழலாடிக் கொண்டிருக்கும்.

பல நேரங்களில், அதை நினைத்து நாம் மகிழ்ந்து மற்றவர்களுடன் பகிர்ந்திருப்போம். ஆனால் இன்றைய தலைமுறையினர்களின் விளையாட்டுக் களம் நிறைய மாறி இருக்கிறது. தொழில்நுட்பமும் விஞானமும் நம் வகுப்பறை தொடங்கி படுக்கை அறை வரை அனைத்தையும் மாற்றி விட்டது. குழந்தைகளின் விளையாட்டு மைதானம் இன்று நம் வீட்டு வரவேற்பறைக்குள் சுருங்கி போனது. 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விடியோ கேம்களை ரசித்து விளையாக தொடங்கி உள்ளனர். வீடியோ கேம்களுக்கான சீன சந்தை, உலகளவில் மிகப்பெரியது என மதிப்பிடப்பட்டுள்ளது, அளவு மற்றும் தரம் மேலும் விரிவடைந்துள்ளது என்று ஷாங்காயில்.நடைபெற்ற 

ஆசியாவின் மிகப்பெரிய கேமிங் கண்காட்சியான சீனா டிஜிட்டல் என்டர்டெயின்மென்ட் எக்ஸ்போ மாநாட்டில் தொழில்துறை வல்லுநர்கள் தெரிவித்தனர். 

கரோனா நோய் தொற்று,உலகையே முடக்கிப் போட்டுள்ள இன்றைய சூழலில் பெரும்பாலான மக்கள் வீட்டுக்குளே இருந்து பொழுதை கழிக்க வேண்டியுள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விடியோ கேம் விளையாடும் நேரம் அதிகரித்திருப்பதாக பிரெஞ்சு வீடியோ கேம் டெவலப்பர் யுபிசாஃப்டின் கூறினார். "சீன கேமிங் சந்தை உலகின் நம்பர் ஒன் சந்தையாக விளங்கும் சீன கேமிங் சந்தை கடந்த சில ஆண்டுகளில் மேலும் வளர்ச்சி அடைந்துள்ளது.

விளையாட்டு மற்றும் ஸ்போர்ட்ஸ் அனலிட்டிக்ஸ் நிறுவனமான நியூசூவின் மதிப்பீடுகளின்படி, சீனா தற்போது மிகப்பெரிய விளையாட்டு சந்தையாக இருப்பதாகக் கூறப்படுகிறது, குறிப்பாக அதன் வருவாய் 2020 ஆம் ஆண்டில் 41 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து 37 பில்லியன் அமெரிக்க நுகர்வோரிடமிருந்து மொத்த விளையாட்டுத் தொழில் வருவாய் 159.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும், இது ஆண்டுக்கு 9.3 சதவீதம் அதிகரிக்கும் என்று நியூசூ கணித்துள்ளது.

7.8 பில்லியன் உலக மக்கள் தொகையில்  இந்த ஆண்டு 2.69 பில்லியன் மக்கள் வீடியோ கேம்களை விளையாடுவார்கள் என்றும் இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சீனாவில் தற்போது விடியோ கேம் விளையாடுபவர்கள் மிக உயர்ந்த தரமான விளையாட்டுகளுக்கான அணுகலைக் கொண்டுள்ளனர். 5 ஜி தொழில்நுட்பம் மற்றும் நிண்டெண்டோ ஸ்விட்ச் போன்ற பிரதான கன்சோல்கள் பயன்படுத்துவதன் மூலம் விடியோ கேம் தரம் உயர்ந்துள்ளது என்று கூறப்படுகிறது.

பொதுவாக சீனக் கலாச்சாரத்தை  விளக்குவதற்கும் இந்த கலாச்சாரத்தில் உள்ள கதாபாத்திரங்களை விளக்கும் விதமாகவும் கேம்கள் உருவாக்கப்படுகின்றன என்று  பெர்ஃபெக்ட் வேர்ல்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராபர்ட் எச்.சியாவோ கூறினார். சமீப காலமாக ஒரு விளையாட்டின் உலகளாவிய பிரபலத்திற்கு சீன கூறுகள்தான் காரணம் என ஷாங்காய் ஆன்லைன் கேம் அசோசியேஷன் கூறியுள்ளது. 

"ஒரு விளையாட்டு சம்பந்தப்பட்ட சீன கூறுகள், உலகளவில் மிகவும் பிரபலமாகிவிடும். இது பல துறைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, சீன குணாதிசயங்களைக் கொண்ட சில திரைப்படங்கள் மற்றும் அனிமேஷன்கள் உலகளவில் சிறந்த சந்தை செயல்திறனைப் பெற்றுள்ளன. விளையாட்டு, சீன பாணியாக  இருக்கலாம், ஆனால் கதை சொல்வது மிகவும் சர்வதேச தரத்தில் இருக்க வேண்டும், "என்று ஷாங்காய் ஆன்லைன் விளையாட்டு சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹான் ஷுவாய் கூறினார்.

மேலும் 23 ஆண்டுகளுக்கும் மேலாக சீனாவில் உள்ள யுபிசாஃப்ட் என்ற நிறுவனம் இப்போது ஷாங்காய் மற்றும் செங்டுவில் மிக பிரபலமான நிறுவனம் ஆகும். இதில் 1,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிகின்றனர். சீன நிறுவனங்கள் உருவாக்கிய விடியோ கேம்கள் கடந்த ஆண்டு வெளிநாட்டு சந்தைகளில் இருந்து கிட்டத்தட்ட 7.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியுள்ளன, இது ஆண்டுக்கு 36 சதவீதம் அதிகரித்துள்ளது என்று சீனா ஆடியோ-வீடியோ மற்றும் டிஜிட்டல் பப்ளிஷிங் அசோசியேஷன் தெரிவித்துள்ளது. 

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய மூன்றும் சிறந்த சந்தைகளாக விளங்குகின்றன. அமெரிக்க மக்கள்தொகையில் இரு மடங்கிற்குமேலாக 660 மில்லியனுக்கும் அதிகமான விளையாட்டாளர்களுடன் சீனா உலகின் மிகப்பெரிய மொபைல் விளையாட்டு சந்தையாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com