வேளாண் உற்பத்தித் தொழில் நுட்பங்களை மேம்படுத்தும் பெய்டோவ் அமைப்பு

140 கோடி மக்கள் தொகை கொண்ட சீனாவுக்கு வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும்.
வேளாண் உற்பத்தித் தொழில் நுட்பங்களை மேம்படுத்தும் பெய்டோவ் அமைப்பு
வேளாண் உற்பத்தித் தொழில் நுட்பங்களை மேம்படுத்தும் பெய்டோவ் அமைப்பு

140 கோடி மக்கள் தொகை கொண்ட சீனாவுக்கு வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும்.

நவீனமயமாகும் வேளாண் துறை வளர்ச்சிக்கு,  அறிவியல் தொழில் நுட்ப ஆதாரம் அவசியமானது என்று சீன அரசுத் தலைவர் வலியுறுத்தி உள்ளார். வேளாண்மை மற்றும் கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய உந்து சக்தியாக, அறிவியல் தொழில் நுட்பம் இருந்து வருகிறது. விளைநிலம் எல்லை கொண்டதாக உள்ளது. ஆனால், அறிவியல் தொழில் நுட்பம் எல்லையற்றதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நெல், கோதுமை உள்ளிட்ட தானியங்கள் அறுவடை என்று கூறினால், விவசாயிகள் வயல்கள் விறுவிறுப்பாக உழைக்கும் காட்சி தான் நம் மனதில் எழும். இருப்பினும், தற்போது, நெல் நாற்று வளர்ப்பு, நெல் நடவு, வயலில் விவசாயப் பணி உள்ளிட்டவை இயந்திரமயமாக்கத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. 

சீனாவின் வயல்களில், ஆளில்லா பறக்கும் கருவிகள், ஆளில்லா வேளாண் இயந்திரங்கள் பயன்பாட்டிற்கு வரும் காட்சிகளை எங்கும் காண முடியும். எடுத்துக்காட்டாக, இவ்வாண்டு சீனாவின் ஜியாங் சூ, ஹுபெய் உள்ளிட்ட மாநிலங்களில், ஆளில்லா இயந்திரங்கள்,  கோதுமை அறுவடை செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளதன.  இந்த நவீன இயந்திரங்கள், கோதுமையை அறுவடை செய்வதுடன், வைக்கோல்களை பொடியாக்கி அவற்றை  இயற்கை உரமாகவும் மாற்றக் கூடியது.

இன்றைய காலத்தில், பொருட்களின் இணையம், 5ஜி, செயற்கை நுண்ணறிவு ஆகிய நவீன தொழில் நுட்பங்கள்,  வேளாண் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதுடன் மட்டுமல்லாமல்,  வேளாண் துறையில் புதிய  தொழில்களை உருவாக்கவும் அமைகின்றன. குறிப்பாக, இந்த தொழில் நுட்பங்கள், விவசாயிகளின் விவசாய பணிகளை எளிமைப்படுத்தி வருமானத்தை அதிகரித்து நன்மையளிப்பதாகவும் உள்ளது. மேலும்,  இயற்கைப் பேரிடர் ஆகியவை வேளாண் உற்பத்திக்கு ஏற்படுத்தும் இழப்பை நவீன தொழில் நுடங்கள் இயன்ற அளவில் குறைக்க உதவுகின்றன.

புதிய ரக அடிப்படை வசதிக் கட்டுமானத்தை விரைவுபடுத்த சீனா செயல்பட்டு வருகிறது. அவற்றில், சமீபத்தில், பெய்டோவ்-3 புவியிடங்காட்டி செயற்கைக் கோள் அமைப்புகளில் முக்கிய ஒன்றாகும்.

பெய்டோவ் அமைப்பின் மூலம், வேளாண் உற்பத்தித் துறையில் தானியக்கம், துல்லியதன்மை, ஒட்டுமொத்த உற்பத்தி திறன் ஆகியவை பெருமளவில் மேம்படுத்தப்படும். இந்த புவியிடங்காட்டி அமைப்பை அடிப்படையைக் கொண்டு, புதிய தொழில் நுட்பங்கள், புதிய பயன்பாடுகள் ஆகியவை வளர்க்கப்படும்.

தற்போது வரை, பல நாடுகள், பெய்டோவ் அமைப்புடனான ஒத்துழைப்பு உடன்படிக்கையை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, இந்த புதிய வசதி,  துல்லியமான வேளாண் உற்பத்தி வழிமுறையை மேம்படுத்த துணைபுரியும். எதிர்காலத்தில், அறிவியில் தொழில் நுட்பங்களின் மூலம் வேண்மை உற்பத்தியை மேம்படுத்துவற்கான சர்வதேச ஒத்துழைப்பு, உலக உணவுப் பாதுகாப்புக்கு முக்கிய பங்களிப்பை வழங்குமென எதிர்பார்க்கின்றோம்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com