பாகிஸ்தான் வரைபடத்தில் காஷ்மீர்: பிரதமர் இம்ரான் கான் வெளியீடு

​பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்ட அந்த நாட்டின் புதிய வரைபடத்தில் அந்த நாட்டின் அங்கமாக காஷ்மீரும் இணைக்கப்பட்டுள்ளது.
​பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்ட அந்த நாட்டின் புதிய வரைபடத்தில் அந்த நாட்டின் அங்கமாக காஷ்மீரும் இணைக்கப்பட்டுள்ளது.
​பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்ட அந்த நாட்டின் புதிய வரைபடத்தில் அந்த நாட்டின் அங்கமாக காஷ்மீரும் இணைக்கப்பட்டுள்ளது.


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்ட அந்த நாட்டின் புதிய வரைபடத்தில் அந்த நாட்டின் அங்கமாக காஷ்மீரும் இணைக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் முழுவதும் பாகிஸ்தானின் அங்கமாக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்ட இந்த வரைபடத்துக்கு பாகிஸ்தான் அமைச்சரவை இன்று (செவ்வாய்க்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளது. 

இதன்பிறகு செய்தியாளர் சந்திப்பில் இம்ரான் கான் தெரிவித்ததாவது:

"பாகிஸ்தான் வரலாற்றில் இது மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க தினம். பாகிஸ்தானின் இந்த புதிய வரைபடம் ஒட்டுமொத்த நாட்டு மக்கள் மற்றும் காஷ்மீர் மக்களின் விருப்பமாக உள்ளது. நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த புதிய வரைபடத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. கடந்தாண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்திய அரசின் சட்டவிரோத சட்டத்தையும் இந்த வரைபடம் எதிர்க்கிறது.

காஷ்மீர் பிரச்னைக்கான தீர்வு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தில்தான் உள்ளது. காஷ்மீர் மக்களுக்காக பாகிஸ்தான் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளும். காஷ்மீர் விவகாரத்தில் ராணுவம் மூலம் தீர்வு காண முடியாது. அரசியல் ரீதியாக மட்டுமே தீர்வு காணமுடியும்." என்றார் இம்ரான் கான்.   

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370, 35 ஏ ரத்து செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி, பாகிஸ்தான் இந்த வரைபடத்தை வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com