ஜெர்மனியில் கரோனா இரண்டாம் அலையா? : மருத்துவர்கள் விளக்கம்

ஜெர்மனி ஏற்கெனவே கரோனா வைரஸின் இரண்டாவது அலைகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது என்று ஜெர்மன் மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜெர்மனி ஏற்கெனவே கரோனா வைரஸின் இரண்டாவது அலைகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது என்று ஜெர்மன் மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியில் சமீபத்திய நாட்களில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சமூக இடைவெளிகளைக் கடைபிடிக்காமலும், போதிய சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றாமலும் பொதுமக்கள் அலட்சியம் காட்டுவதால் கரோனா பரவல் அதிகரிப்பதாக ஜெர்மன் மருத்துவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஜெர்மனி கரோனா வைரஸின் இரண்டாம் அலை பாதிப்பில் உள்ளதாக தெரிவித்த ஜெர்மன் மருத்துவர் சங்கத்தின் தலைவர் சூசேன் ஜொன்னா, “இயல்புநிலைக்குத் திரும்புவதற்காக விதிக்கபப்ட்டுள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தளர்த்துவது ஜெர்மனி இதுவரை அடைந்த வெற்றியைப் பாதிக்கும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்க வலியுறுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளான சமூக விலகல் மற்றும் முகமூடிகளை அணிவது போன்றவற்றை பின்பற்றக் கேட்டுக்கொண்டார்.

ஜெர்மனியில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பின் எண்ணிக்கை 879 அதிகரித்து 211,281 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய்களுக்கான ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் (ஆர்.கே.ஐ) தரவுகள் தெரிவித்துள்ளன. மேலும் இதுவரை கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 9,156 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com