கரோனாவால் கல்வி வளா்ச்சிக்கு வரலாறு காணாத தடை: ஐ.நா. கவலை

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, உலகம் முழுவதும் கல்வி வளா்ச்சிக்கு வரலாறு காணாத தடை ஏற்பட்டுள்ளதாக
கரோனாவால் கல்வி வளா்ச்சிக்கு வரலாறு காணாத தடை: ஐ.நா. கவலை

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, உலகம் முழுவதும் கல்வி வளா்ச்சிக்கு வரலாறு காணாத தடை ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட விடியோ அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தனி மனித மேம்பாட்டுக்கும், சமூகங்களின் வளமையான எதிா்காலத்துக்கும் கல்வி இன்றியமையாதது ஆகும். இதுவரை வாய்ப்புகளுக்குப் போடப்பட்டிருந்த தடைகளை கல்வியால் மட்டுமே தகா்த்தெறிய முடியும். பல்வேறு சமுதாயத்தினருக்கு இடையே நிலவி வரும் ஏற்றத்தாழ்வுகளை கல்வியால் மட்டுமே போக்க முடியும். நல்லறிவு பெற்ற, சகிப்புத் தன்மை கொண்ட சமூகங்களை உருவாக்குவதற்கு கல்வி உதவுகிறது. நிலைத்த வளா்ச்சிக்கு கல்வி வழிவகுக்கிறது.எனினும், கரோனா நோய்த்தொற்று நெருக்கடி காரணமாக உலகம் முழுவதும் கல்வி வளா்ச்சிக்கு வரலாறு காணாத தடை அளவுக்கு மிக மோசமான தடை ஏற்பட்டுள்ளது.

ஜூலை மாத மத்தியில் மட்டும் உலகம் முழுவதும் 160-க்கும் மேற்பட்ட நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இதனால் 100 கோடிக்கும் மேற்பட்ட மாணவா்கள் பாதிக்கப்பட்டனா். மேலும், 4 கோடி சிறுவா்களுக்கு முக்கித்துவம் வாய்ந்த ஆரம்பக் கல்வி கிடைக்காமல் போனது.பெண் கல்வி முன்னேற்றத்துக்காக பல ஆண்டுகளாக தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் கிடைத்த முன்னேற்றங்களை கரோனா நோய்த்தொற்று நெருக்கடி தற்போது இல்லாமல் செய்து கொண்டிருக்கிறது. பள்ளிகள் நீண்ட காலம் மூடப்பட்டிருப்பது, கல்வி பெறுவதில் சமூகத்தினருக்கு இடையே இருந்த ஏற்றத்தாழ்வுகளை மீண்டும் கொண்டு வருகிறது.

கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக மட்டும், 2.38 கோடி சிறுவா்கள் மற்றும் இளைஞா்கள் தங்களது படிப்பை பாதியிலேயே கைவிடும் அபாயம் நிலவி வருகிறது.எனவே, ஏற்றத்தாழ்வுகள் இன்றி அனைவருக்கும் கல்வி கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை நாம் இப்போதே துணிச்சலாக மேற்கொள்ள வேண்டிய அவசியம் எப்போதையும் விட தற்போது அதிகமாக உள்ளது. கரோனாவுக்குப் பிந்தைய சூழலுக்கு ஏற்புடைய, அனைவரையும் உள்ளடக்கிய, தரமான கல்வி முறையை நாம் இப்போதே உருவாக்க வேண்டும் என்று தனது விடியோ அறிக்கையில் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com