நாம் தலைமுறைப் பேரழிவை எதிர்கொள்கிறோம்: எச்சரிக்கும் ஐ.நா

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் உலகம் ஒரு தலைமுறை பேரழிவை எதிர்கொள்கிறது என்று ஐக்கிய நாடுகள் பையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் எச்சரித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ்
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ்

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் உலகம் ஒரு தலைமுறை பேரழிவை எதிர்கொள்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் எச்சரித்துள்ளார்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவலால் 160க்கும் மேற்பட்ட நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. கரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு 100 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தொற்றுநோய்க்கு முன்னர் 250 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் ஏற்கெனவே பள்ளிக்குச் செல்லாமல் இருந்ததோடு, வளரும் நாடுகளில் உள்ள மேல்நிலைப் பள்ளி மாணவர்களில் கால் பகுதியினர் மட்டுமே அடிப்படை திறன்களுடன் வெளியேறுகிறார்கள் என்று ஐ.நா சபை குறிப்பிட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை பேசிய ஐநா பொதுச்செயலாளர், “இப்போது நாம் ஒரு தலைமுறை பேரழிவை எதிர்கொள்கிறோம், இது எண்ணற்ற மனித ஆற்றல்களை வீணடிக்கிறது. கரோனா பரவலால் பல ஆண்டுகளுக்கான  முன்னேற்றம் தடைபட உள்ளது.” என்றார்.

மேலும் "COVID-19 பரவல் கட்டுக்குள் வந்தவுடன் மாணவர்களை பள்ளிகளிலும் கற்றல் நிறுவனங்களிலும் முடிந்தவரை பாதுகாப்பாக திரும்ப அனுப்புவது முதன்மையானதாக இருக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

இந்நிலையில் உலகளாவிய கல்வியை மீண்டும் கொண்டு செல்வதற்கான ஐநாவின் பரிந்துரைகள் வெளிவந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com