தொழில் புரிவதற்கான சூழல் மேம்பாடு; பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சிக்கு நன்மை

மனித வளங்களைத் தவிர்த்து, ஒரு நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழில் புரிவதற்கான சூழல் ஆகியவை,
தொழில் புரிவதற்கான சூழல் மேம்பாடு; பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சிக்கு நன்மை
தொழில் புரிவதற்கான சூழல் மேம்பாடு; பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சிக்கு நன்மை

மனித வளங்களைத் தவிர்த்து, ஒரு நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழில் புரிவதற்கான சூழல் ஆகியவை, நாட்டுப் பொருளாதாரத்தின் நிலையான வளர்ச்சிக்கு 2 முக்கிய ஆதாரங்களாகத் திகழ்கின்றன. குறிப்பாக, தொழில் புரிவதற்கு உகந்த சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும். அத்தகைய சூழல் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வருவதால், தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதாக அவை உள்ளன. இதன் அடிப்படையில் பொருளாதாரம் சீராகவும் நிலையாகவும் வளர்ந்து வருகிறது. அதை முக்கியதக் கருத்தில் கொண்டு சீனா கடந்த சில ஆண்டுகளில்,  சந்தை, சட்டம், சர்வதேசத் தரம் ஆகியவற்றைக் கடைப்பிடித்து, தொழில் புரிவதற்கான உகந்த சூழலை உருவாக்கி வருகிறது.

கொவைட்-19 தொற்று நோய் பரவல் காரணமாக உலகப் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டின் முதலாவது காலாண்டில் சீனப் பொருளாதார வளர்ச்சியில் 6.8 விழுக்காடு வீழ்ந்தது. ஆனால், நோய் தடுப்பு மற்றும் பொருளாதாரச் சமூக வளர்ச்சி ஆகியவற்றை ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் சீனாவில் ஆக்கப்பூர்வமான முன்னேற்றத்தை கொண்டு வந்துள்ளது. சீனப் பொருளாதாரம், 2ஆவது காலாண்டில் 3.2 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது. இக்காலத்தில், சரக்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அதிகரித்துள்ளன. இதன் பின்னணியில், நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பின் போது, அரசு முனைப்புடன் நிறுவனங்களுக்கு சேவை புரிந்து, தொழில் நிறுவனங்களுக்கு உதவும் செயல்முறையை எளிமைப்படுத்தியது. மேலும், இணையம் வழியாக அங்கீகாரம் அளித்துள்ளது. பல்வகை நடவடிக்கைகள், தொழில் நிறுவனங்களுக்கு நன்மையளிப்பதாக உள்ளன. எடுத்துக்காட்டாக, சிறு நிறுவனம் மற்றும் சுய தொழில் புரிபவர்கள் இயங்கும் இடம் குறித்து விதிகள் தளர்வு கொண்டு வரப்பட்டுள்ளது.

சமீபத்தில் உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், தொழில் புரிவதற்கான உகந்த சூழலை மேம்படுத்துவதில் பெரும் சாதனை பெற்றுள்ள சீனா,  உலக நாடுகளுடன் அதன் சீர்திருத்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத்தக்கது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார உலகமயமாக்கலில், குறிப்பாக கரோனா தொற்று நோய் உலகப் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள பின்னணியில், தொழில் புரிவதற்கு உகந்த சூழலே, பொருளாதார வளர்ச்சியின் மீட்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நிலையில், பல்வேறு நாடுகள் தொழில் புரிவதற்கு நியாயமான வெளிப்படையான மற்றும்  எதிர்பார்க்க கூடிய சூழலை உருவாக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. பொருளாதார வர்த்தகத் துறையில் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் இன்றைய உலகில், இத்தகைய சூழலே ஒன்றுக்கு ஒன்று நன்மை தந்து கூட்டு வெற்றி பெறுவதற்கு அடிப்படையாக இருக்கும்.

தகவல்-சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com