கரோனாவால் 15 விநாடிகளுக்கு ஒருவர் பலி: ஆய்வில் தகவல்

உலகம் முழுவதும் பரவி வரும் கரோனா பாதிப்பால் 15 விநாடிகளுக்கு ஒருவர் இறப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கரோனாவால் ஒவ்வொரு 15 விநாடிகளுக்கும் ஒருவர் இறப்பு
கரோனாவால் ஒவ்வொரு 15 விநாடிகளுக்கும் ஒருவர் இறப்பு

உலகம் முழுவதும் பரவி வரும் கரோனா பாதிப்பால் 15 விநாடிகளுக்கு ஒருவர் இறப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகரித்து வரும் கரோனா பாதிப்பால் உலகின் பல நாடுகளும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றன. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தவித்து வருகின்றன.

இந்நிலையில் சமீபத்திய ஆய்வில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த இரண்டு வாரத் தரவுகளின் அடிப்படையில் தனியார் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகளின்படி, கரோனா பாதிப்பால் சராசரியாக ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் 5,900 பேர் இறக்கின்றனர் எனத் தெரியவந்துள்ளது.

கரோனா பாதிப்பால் அமெரிக்காவும், லத்தீன் அமெரிக்க நாடுகளும் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. தொற்றுநோயின் முக்கிய பாதிப்புப் பகுதியாக உள்ள இந்த நாடுகள் கரோனா பரவலைத் தடுக்கப் போராடி வருகின்றன.

லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகள் முழுவதும் 10 கோடிக்கும்  அதிகமான மக்கள் சேரிப்பகுதிகளில்  வசிப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித குடியேற்றத் திட்டம் தெரிவித்துள்ளது. இங்கு வசிக்கும் பலர் முறைசாரா துறைப் பணிகளில் உள்ளனர். இந்த மக்களின் நெருக்கமான வாழ்க்கை முறை கரோனா பரவலுக்கு காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்ட தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோனி ஃபாசி திங்களன்று, கரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாகாணங்களில் பொதுமுடக்க கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஆய்வின் மூலம் உலகம் முழுவதும் கரோனாவால் 15 வினாடிக்கு ஒரு நபர் இறப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பால் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை புதன்கிழமை நிலவரப்படி 700,000 ஐத் தாண்டியுள்ளது. அமெரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் இறப்புக்கள் அதிகரித்துள்ளன.
  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com