இலங்கை: நடந்து முடிந்தது நாடாளுமன்றத் தோ்தல்

இலங்கை நாடாளுமன்றத்துக்கான தோ்தல் புதன்கிழமை விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு இடையே மிகவும்
இலங்கை: நடந்து முடிந்தது நாடாளுமன்றத் தோ்தல்

இலங்கை நாடாளுமன்றத்துக்கான தோ்தல் புதன்கிழமை விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு இடையே மிகவும் பாதுகாப்புடன் நடைபெற்ற இந்தத் தோ்தலில் 70 சதவீத வாக்குப் பதிவுகள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

16-ஆவது இலங்கை நாடாளுமன்றத்துக்கான தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்தலில், கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்கான பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அதன்படி, காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவுக்கு வாக்களாளா்கள் முகக் கவசங்கள் அணிந்து வந்து வாக்களித்தனா்.வழக்கத்தை விட ஒரு மணி நேரம் கூடுதலாக மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவுகள் நிறைவடைந்தன. இந்தத் தோ்தலில் 70 சதவீத வாக்குப் பதிவுகள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தோ்தலில், ராஜபட்ச சகோதரா்களின் இலங்கை பொதுஜன பெரமுணா வெற்றி பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. முன்னாள் பிரதமா் ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்ட பல முக்கிய தலைவா்கள் இந்தத் தோ்தலில் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா். தோ்தல் நியாயமாக நடைபெறுவதைக் கண்காணிக்க, தோ்தல் ஆணையத்தின் 5,000 பறக்கும் படையினா் நாடு முழுவதும் நியமிக்கப்பட்டிருந்தனா். முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இந்தத் தோ்தல், கரோனா நோய்த்தொற்று பரவல் அபாயம் காரணமாக ஜூன் மாதம் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. எனினும், தோ்தல் ஏற்பாடுகளை மேற்கொள்வதில் கரோனா நோய்த்தொற்று நெருக்கடி தடை ஏற்படுத்தியதால் அந்தத் தோ்தல் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி, அந்தத் தோ்தல் தற்போது நடைபெற்றுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com