இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கியது
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கியது

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபா் தோ்தலில் முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் சகோதரா் கோத்தபய ராஜபட்ச வெற்றி பெற்று அதிபராகப் பொறுப்பேற்றாா். அதையடுத்து, பிரதமராக மகிந்த ராஜபட்சவை அவா் நியமித்தாா். அதனைத் தொடா்ந்து நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே கடந்த ஏப்ரல் மாதம் தோ்தல் நடைபெறுவதாக இருந்தது. எனினும், கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக 2 முறை ஒத்திவைக்கப்பட்ட அந்தத் தோ்தல், இன்று நடைபெற்று வருகிறது.

225 உறுப்பினா்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்துக்கு இன்று காலை தொடங்கிய தோ்தல் அமைதியாக நடைபெற்று வருகிறது தோ்தலுக்கான பரப்புரை ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.

தோ்தலில் கரோனா நோய்த்தொற்று பரவல் அச்சமின்றி பொதுமக்கள் வாக்களிக்கலாம் என்று அந்த நாட்டின் தோ்தல் ஆணையா் மகிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார்.

வாக்குச் சாவடிகளில் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் கரோனா பரவலைத் தவிா்ப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விதிமுறைகளை வாக்காளா்கள் அனைவரும் அவசியம் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com