பாகிஸ்தானில் சர்வதேச விமானப் போக்குவரத்து ஞாயிறு முதல் துவக்கம்

பாகிஸ்தானில் கரோனா பரவல் அச்சத்தினால் தடை செய்யப்பட்டிருந்த சர்வதேச விமானப் போக்குவரத்து ஞாயிறு முதல் துவக்கப்பட உள்ளது.
பாகிஸ்தானில் கரோனா பரவல் அச்சத்தினால் தடை செய்யப்பட்டிருந்த சர்வதேச விமானப் போக்குவரத்து ஞாயிறு முதல் துவக்கப்பட உள்ளது.
பாகிஸ்தானில் கரோனா பரவல் அச்சத்தினால் தடை செய்யப்பட்டிருந்த சர்வதேச விமானப் போக்குவரத்து ஞாயிறு முதல் துவக்கப்பட உள்ளது.

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கரோனா பரவல் அச்சத்தினால் தடை செய்யப்பட்டிருந்த சர்வதேச விமானப் போக்குவரத்து ஞாயிறு முதல் துவக்கப்பட உள்ளது.

பாகிஸ்தானில் அதிகரித்து வந்த கரோனா தொற்று எண்ணிக்கையின் காரணமாக உள்நாட்டு விமானப் போக்குவரத்து  மார்ச் 26-ஆம் தேதி முதலும், சர்வதேச விமானப் போக்குவரத்து மார்ச் 21-ஆம் தேதி முதலும் தடை செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் பாகிஸ்தானில் சர்வதேச விமானப் போக்குவரத்து ஞாயிறு முதல் துவக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக ‘டான்’ செய்திதாளில் வெளியாகியுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:

பாகிஸ்தானின் சிவில் விமானப் போக்குவரத்து துறையானது அந்நாட்டு விமானப் போக்குவரத்து அலுவலர்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிக்கையில்,’ பாகிஸ்தானில் சர்வதேச விமானப் போக்குவரத்து வரும் 9-ஆம் தேதி (ஞாயிறு) முதல் துவக்கப்பட உள்ளது என்றும், கரோனாவிற்கு முன்பிருந்த நிலையின்படி அந்நாட்டு விமான நிலையங்கள் செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் பயணிகளைக் கையாளுவதில் கரோனா தொற்று சார்ந்த சர்வதேச நடைமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்படும் என்று அதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக வெளியான மற்றொரு அறிவிக்கையின்படி பாகிஸ்தானில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து ஆகஸ்ட் 6-ஆம் தேதி நள்ளிரவு முதல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com