ஆண்களைவிட குறைந்த கரோனா பாதிப்பில் பெண்கள்: காரணம் என்ன?

பெண்களின் பாலியல் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் கரோனா பாதிப்பிற்கு எதிராக செயல்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கரோனாவால் குறைந்த அளவே பாதிக்கப்படும் பெண்கள்
கரோனாவால் குறைந்த அளவே பாதிக்கப்படும் பெண்கள்

ஆரம்பக்கால ஆய்வில் பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு எளிதில் கரோனா தொற்று பாதிப்பு ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டது. இந்நிலையில் பெண்களின் பாலியல் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் கரோனா பாதிப்பிற்கு எதிராக செயல்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

லண்டனின் கிங்ஸ் கல்லூரி நடத்திய ஆய்வில், பெண்களின் பாலியல் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் கரோனாவிற்கு எதிராக பாதுகாப்பு வழங்குவதாக தெரிய வந்துள்ளது.

கடந்தகால நோய்த்தொற்றுகளான சார்ஸ் மற்றும் மெர்ஸ் போன்றவற்றின் ஆய்வுத் தரவுகளுடன் ஒப்பிட்டு மேற்கொண்ட ஆய்வில் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

முந்தைய நோய்த் தொற்றுகளான சார்ஸ் மற்றும், மெர்ஸ் ஆகியவற்றின் விலங்கு மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பாலினத்தின் அடிப்படையில் நோய்த்தாக்குதலின் தீவிரத் தன்மை குறித்து ஆராயப்பட்டது.

அதேபோல் கரோனா வைரஸ் பரவலின் தரவுகளை ஆராய்ந்ததில் வயது மற்றும் பாலினத்தின் அடிப்படையில் கரோனா அறிகுறிகளின் தீவிரத்தன்மையின் மாறுபாடுகளுக்கு பெண் பாலியல் ஹார்மோனின் ஈஸ்ட்ரோஜனின் பாதுகாப்பு விளைவு காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் பெண்களைக் காட்டிலும் ஆண்கள் பெரும்பான்மையாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com