அதிகார பலத்தை பயன்படுத்தும் அமெரிக்காவின் மீது தடை செய்தால் உலகில் சமநிலை காணப்படும்

அமெரிக்காவில் கரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
அதிகார பலத்தை பயன்படுத்தும் அமெரிக்காவின் மீது தடை செய்தால் உலகில் சமநிலை காணப்படும்

அமெரிக்காவில் கரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மோசமான இந்நிலைமையைக் கண்டும் காணாமல் செயல்படும் அந்நாடு மற்ற நாடுகளின் உள்விவகாரங்களிலும் அது சேராத அமைப்பின் சீர்திருத்தத்திலும் தலையிட்டு வருகிறது.

சொந்த தவறுகளைக் காணாமல், சொந்த பிரச்சினைகளைத் தீர்க்க திறமை பற்றாக்குறை இருக்கும் அமெரிக்கா, சுயநலத்துக்காக பல்வகை சாக்குப்போக்குகளில் மற்ற தரப்புகள் மீது தடை மேற்கொள்வது வழக்கம். எடுத்துக்காட்டாக, ஹாங்காங்கின் தன்னாட்சியைச் சாக்குப்போக்காகக் கொண்டு அமெரிக்கா சீனாவின் ஹாங்காங் விவகாரத்தில் தலையிட்டு, ஹாங்காங் அதிகாரிகள் சிலரின் மீது தடை நடவடிக்கையை மேற்கொள்வதாக தெரிவித்தது.

இதற்கு ஹாங்காங் மக்கள் உள்ளிட்ட சீன மக்கள் அனைவரும் எதிர்ப்பு மற்றும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஹாங்காங் அதிகாரிகள் இத்தடைக்கு பயமில்லாத மனநிலையை வெளிப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சீன நடுவண் அரசு எப்போதுமே உள்ளூர் அரசுகளுக்கு வலுவான ஆதரவு அளித்து வருகிறது. அமெரிக்காவின் நியாயமற்ற தடைக்கு உகந்த பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவின் குறிப்பிட்ட சிலரின் மீது தடை நடவடிக்கை மேற்கொள்வதாக சீனா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா தன் அதிகார பலத்தை வெளிப்படுத்தும் இன்னொரு உதாரணம், உலகச் சுகாதார அமைப்பின் சீர்திருத்தத்தக்கு இவ்வமைப்பிலிருந்து விலகிய அது தலைமை தாங்க விரும்புகிறது என்பதாகும். இது மிகவும் அபத்தமானதாக உள்ளது. எனவே, அமெரிக்காவின் செயல், ஜெர்மனி, பிரான்சு ஆகிய அதன் கூட்டணி நாடுகளின் மனநிறைவின்மையை ஏற்படுத்தியுள்ளது.

நீதி நியாயத்துக்கு ஆதரவு கிடைக்கும். நியாயமற்ற செயலுக்கு ஆதரவு இழந்து விடும் என்பது சீனாவின் பழமொழி. மேலும், எந்த செயலும் சட்ட ஒழுங்கைப் பின்பற்ற வேண்டும். வல்லரசின் செல்வாக்கு மிக அதிகம். அதன் செயலின் பின்விளைவு மிக முக்கியம். எனவே அதன் செயலுக்கும் சட்ட ஒழுக்கு மேலும் அவசியம். தவிரவும், நாடுகளுக்கிடையில் ஒன்றுடன் ஒன்று சீராக போட்டியிடுதல், ஒன்றை ஒன்று கண்காணித்தல் ஆகியவை உண்மையான சமநிலையின் உருவாக்கத்துக்குத் துணைபுரியும்.

இதர நாடுகள் அமெரிக்காவைப் பின் தொடர்ந்து செயல்படுவதற்குப் பதிலாக, சீனாவைப் போல் உறுதி மற்றும் திறமையுடன் அமெரிக்காவின் செயல்கள் பற்றி சரியான முறையில் மதிப்பிட்ட பிறகு, அவற்றுக்கு உகந்த மறுமொழி அல்லது பதிலடி கொடுக்க வேண்டும்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com