நேபாளத்தில் நிலச்சரிவு: உயிரிழப்பு 18-ஆக அதிகரிப்பு

நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ள நிலையில், காணாமல் போன 21 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
நேபாளத்தில் நிலச்சரிவு: உயிரிழப்பு 18-ஆக அதிகரிப்பு
நேபாளத்தில் நிலச்சரிவு: உயிரிழப்பு 18-ஆக அதிகரிப்பு

காத்மாண்டு: நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ள நிலையில், காணாமல் போன 21 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

நேபாளத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சிந்துபால்சோக் மாவட்டத்தில் உள்ள லிடி கிராமத்தில் கடந்த வெள்ளிக் கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 37 வீடுகள் முழுவதுமாக சேதம் அடைந்தன. 11 ஏராளமான மக்கள் நிலச்சரிவில் சிக்கினர். 11 குழந்தைகள், 4 பெண்கள், 2 ஆண்கள் உட்பட 18 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் காணாமல் போன 21 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக பேசிய மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பிரஜ்வால், நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மலைப்பகுதியில் மேலும் 25 வீடுகள் பாதிக்கப்படும் நிலையில் உள்ளன. இதனால் அப்பகுதியில் இருந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் கூடாம் அமைத்து தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

நேபாளத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட இடங்களில் மறுசீரமைப்பு பணிகளை தொடர நிதி ஒதுக்கப்பட்டது. மறுசீரமைக்க வேண்டிய இடங்களின் பட்டியலில் தற்போது பாதிக்கப்பட்ட கிராமமும் உள்ளது. ஆனால் சீரமைப்பு பணிகளை ஏற்படுத்தாததே நிலச்சரிவுக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com