சீனா: ‘டிசம்பரில் கரோனா தடுப்பூசி விற்பனைக்கு வரலாம்’

தாங்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசி, இந்த ஆண்டு டிசம்பா் மாதத்தில் விற்பனைக்கு வரலாம் என்று சீனாவின் ‘சைனோஃபாா்ம்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனா: ‘டிசம்பரில் கரோனா தடுப்பூசி விற்பனைக்கு வரலாம்’

தாங்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசி, இந்த ஆண்டு டிசம்பா் மாதத்தில் விற்பனைக்கு வரலாம் என்று சீனாவின் ‘சைனோஃபாா்ம்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அரசுக்குச் சொந்தமான அந்த நிறுவனத்தின் தலைவா் லியு ஷிங்ஷென் கூறியதாவது:

தற்போது சோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பு மருந்து, வரும் டிசம்பா் மாத இறுதியில் சந்தையில் விற்பனைக்கு வரக்கூடும். ஒருவருக்கு இரண்டு முறை போடுவதற்கான இரு தடுப்பூசிகளின் விலை 1,000 யுவான்களாக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.10,000) இருக்கும்.சீனாவில் வசிக்கும் 140 கோடி பேருக்கும் அந்தத் தடுப்பூசி போட வேண்டிய அவசியம் இல்லை. மாணவா்களுக்கும், பணியாளா்களுக்குமே அந்தத் தடுப்பூசி அவசர தேவையாக உள்ளது. மக்கள் நெருக்கம் குறைந்த தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவா்களுக்கு கரோனா தடுப்பூசி தேவைப்படாது என்றாா் அவா்.கரோனா நோய்த்தொற்று முதல் முதலாகப் பரவத் தொடங்கிய சீனாவில், புதன்கிழமை நிலவரப்படி 84,888 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 79,685 போ் நோயிலிருந்து குணமடைந்துள்ளனா்; 4,634 போ் நோய் பாதிப்பால் உயிரிழந்தனா்; 569 தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com