கலிபோர்னியாவில் பரவியுள்ள காட்டுத் தீ
கலிபோர்னியாவில் பரவியுள்ள காட்டுத் தீ

காட்டுத் தீயில் சிக்கித் தவிக்கும் கலிபோர்னியா

கலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

கலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ தற்போது உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. கலிபோர்னியாவின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் தீயில் கருகியுள்ளன.

அதிகரித்து வரும் காட்டுத் தீ சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 500க்கும் மேற்பட்டு குடியிருப்புகளை அழித்துள்ளது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள மரங்கள் தீயில் கருகியுள்ளன.

கலிபோர்னியாவில் சமீபத்தில் அதிகரித்துள்ள வெப்ப அலைகளால் பெருவாரியான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ள வெப்பஅலைகளால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது.

கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசோம் கூறுகையில், காட்டுத்தீயைத் தடுக்க 560க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாகத் தெரிவித்தார். கலிபோர்னியா காட்டுத்தீயை அணைக்க கனடா மற்றும் ஆஸ்திரேலியாவின் உதவியை அமெரிக்கா நாடியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com