பாகிஸ்தானில் 3 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு

பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 264 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது.

பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. அந்தவகையில் பாகிஸ்தானிலும் தொற்றால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக பாகிஸ்தான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாவது, புதிதாக 264 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 2,95,636-ஆக அதிகரித்துள்ளது. இதில் 8,801 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 2,80,547 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 601 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. 

சிந்துவில் 1,29,268 பேரும், பஞ்சாபில் 96,741 பேரும், கைபர்-பக்துன்க்வாவில் 36,017 பேரும், இஸ்லாமபாத்தில் 15,611 பேரும், பலுசிஸ்தான் பகுதியில் 12,842 பேரும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 2,294 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக 4 பேர் உயிரிழந்ததால் மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,288-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 21,434 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 26,03,129-ஆக உள்ளது இவ்வாறு சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com