பிரேசிலில் ஒரேநாளில் 366 பேர் கரோனாவுக்கு பலி

கடந்த 24 மணி நேரத்தில் 366 இறப்புகள் பதிவாகியுள்ளதாக பிரேசில் அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,20,828 ஆக உயர்ந்துள்ளது. 
Brazil reports 366 new deaths from COVID-19
Brazil reports 366 new deaths from COVID-19

கடந்த 24 மணி நேரத்தில் 366 இறப்புகள் பதிவாகியுள்ளதாக பிரேசில் அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,20,828 ஆக உயர்ந்துள்ளது. 

பிரேசிலில் தினசரி பாதிப்பு நிலவரத்தை அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது..

கடந்த 24 மணி நேரத்தில் 16,158 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 3,86,2,311 ஆக உயர்ந்துள்ளது. 

சமீபத்திய நாள்களில், தொற்றுநோயால் ஏற்படும் சராசரி இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதே தவிர, நோய்த் தொற்றுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 

கரோனாவால் கடுமையாக பாதிகப்பட்டுள்ள நாடுகளில் பிரேசிலும் ஒன்று. அமெரிக்காவை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் பிரேசில் உள்ளது. 

பிரேசிலின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான சாவ் பாலோவில் 8,03,404 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 29,978 இறப்புகள் பதிவாகியுள்ளன. அடுத்தபடியாக ரியோ டி ஜெனிரோவில் 2,23,302 பேரும்,16,027 இறப்புகளும், சியாராவில் 214,457 பாதிப்பும், 8,384 இறப்புகளும் பதிவாகியுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com