சீனாவும் இந்தியாவும் கூட்டாளிகளாக இருக்க வேண்டியது அவசியம்!

ஆகஸ்ட் 28ஆம் நாள் இந்தியாவுக்கான சீனத் தூதர் சுன் வெய் துங் இந்தியாவின் முக்கிய செய்தி ஊடகமான CNBC-TV18 தொலைக்காட்சிக்கு சிறப்பு பேட்டியளித்தார்.
சீனாவும் இந்தியாவும் கூட்டாளிகளாக இருக்க வேண்டியது அவசியம்!

ஆகஸ்ட் 28ஆம் நாள் இந்தியாவுக்கான சீனத் தூதர் சுன் வெய் துங் இந்தியாவின் முக்கிய செய்தி ஊடகமான CNBC-TV18 தொலைக்காட்சிக்கு சிறப்பு பேட்டியளித்தார். அப்போது சீன-இந்திய உறவு, எல்லைப் பகுதி நிலைமை, இரு நாட்டு பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு, சீனப் பொருளாதாரம், சீன-அமெரிக்க உறவு போன்றவை குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

தூதர் சுன் வெய் துங் குறிப்பிட்டதைப் போல,சீன-இந்திய உறவு குறித்த சீனத் தரப்பின் அடிப்படை நிலைப்பாடு மாறாது. எதிராளியாக அல்லாமல், சீனாவும், இந்தியாவும் கூட்டாளிகளாகும். ஒன்றுக்கொன்று அச்சுறுத்தல் இல்லாமல், இரு தரப்பும் வாய்ப்புகளை வழங்க வேண்டும். இது, இரு நாட்டுத் தலைவர்கள் எட்டியுள்ள முக்கிய ஒத்த கருத்தாகும். இதை உணர்வுபூர்வமாக செயல்படுத்த வேண்டும். இரு தரப்பும் மதிப்பும், ஆதரவும் அளித்து, ஐயம் மற்றும் தவறான எண்ணத்தைத் தவிர்த்து, ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும்.

கருத்து வேற்றுமையைச் சரியாக கையாண்டு, சர்ச்சை நிலை மேலும் மோசமாகுவதைத் தவிர்ப்பது, இரு நாட்டுத் தலைவர்கள் எட்டியுள்ள இன்னொரு ஒத்த கருத்தாகும். எல்லைப் பகுதி விவகாரத்தை இரு தரப்பு உறவில் உள்ள சரியான இடத்தில் வைக்க வேண்டும். எல்லைப் பகுதி சர்ச்சை, இரு தரப்புறவுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். முரண்பாட்டைச் சிக்கலாக்கும் செயல், பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் துணை புரியாது. பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு, வழிமுறைதான். சீனாவும் இந்தியாவும் பகைமையில் சிக்கிக் கொள்ளாமல் காக்கும். இரு தரப்புறவு இயல்பாக நிலைக்கு விரைவில் திரும்ப ஒரே .திசையே நோக்கி முன்னேற வேண்டும்.

தகவல்:சீன ஊடக குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com