அழகிய திபெத்துக்கு உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்பே முதன்மை

உயிரின வாழ்க்கைச் சூழலுக்குரிய ஆக்கப் பணியை முக்கிய இடத்தில் வைத்து, ட்சிங்ஹாய்-திபெத் பீடபூமை..
அழகிய திபெத்துக்கு உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்பே முதன்மை
அழகிய திபெத்துக்கு உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்பே முதன்மை

உயிரின வாழ்க்கைச் சூழலுக்குரிய ஆக்கப் பணியை முக்கிய இடத்தில் வைத்து, ட்சிங்ஹாய்-திபெத் பீடபூமை, சிறந்த உயிரின வாழ்க்கைச் சூழல் ரீதியிலான நாகரிகமாக உருவாக்க வேண்டும் என்று சமீபத்தில் திபெத் பணி குறித்த 7ஆவது ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த பல ஆண்டுகளில், சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில், உயிரின வாழ்க்கைச் சூழலுக்குரிய ஆக்கப் பணி குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பெற்றுள்ளது.

உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்புப் பணிக்கு முதன்மை என்ற முறையைக் கடைப்பிடித்து வரும் திபெத்,  பன்னோக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தற்போது, திபெத்தில்,  47 இயற்கைப் பாதுகாப்பு மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மொத்த நிலபரப்பளவு, 4லட்சத்து 12ஆயிரம் 200 சதுர கிலோமீட்டர் ஆகும். இந்தப் பதிவு, சீனாவில் முதலிடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இதில், திபெத்தின தலைநகர் லாசாவிலுள்ள லாரூ சதுப்பு நிலத்தின் நீர் பரப்பரளவு கடந்த சில ஆண்டுகளில் தொடர்ந்து விரிவாகி வருகிறது. இங்கு வலசை பறவைகள் எண்ணிக்கை 2015இல் இருந்த 6000யில் இருந்து 2019யில் 15ஆயிரமாக உயர்ந்துள்ளது. 

இந்த தரவுகள், திபெத்தில் உயிரின வாழ்க்கைச் சூழலுக்குரிய ஆக்கப் பணியில் கடைத்துள்ள பயனுள்ள முன்னேற்றத்தைக் காட்டுகின்றன.

இவ்வாண்டு ஜூன் திங்கள், 2019ஆம் ஆண்டு திபெத் உயிரின வாழ்க்கைச் சூழல் நிலைமை பற்றிய அறிக்கை ஒன்றை திபெத் தன்னாட்சிப் பிரதேச சுற்றுச்சூழல் பணியகம் வெளியிட்டது. அதன் படி, உலகளவில் தரம் மிகுந்த உயிரின வாழ்க்கைச் சூழல் கொண்ட பிரதேசங்களில் ஒன்றாக திபெத் நிகழ்ந்து வருகிறது. 2019ஆம் ஆண்டு, திபெத்தில் முக்கிய நதிகள் மற்றும் ஏரிகளின் நீர் தரம், மற்றும் காற்றுத் தரம் தொடர்ந்து சீராக உள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டது.

தூய்மையான தண்ணீர் மற்றும் பசுமை மலைகள்,  தங்க மலைகளைப் போன்றதே என்ற தூய்மை வளர்ச்சிக் கண்ணோட்டத்தைப் பின்பற்றி வரும் சீனா, உயிரின வாழ்க்கைச் சூழலின் பாதுகாப்பு மற்றும் ஆக்கப்பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்நிலையில், திபெத்தில், இந்தப் பாதுகாப்பு மற்றும் ஆக்கப்பணிகளில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. 

7ஆவது திபெத் பணிக் கூட்டத்தில், ஒற்றுமை, வளம், நாகரிகம், இணக்கம் அழகு நிறைந்த புதிய நவீனமான திபெத்தின் உருவாக்கம் என்ற இலக்கு முனைவக்கப்பட்டது. அழகிய திபத்தை உருவாக்கும் போக்கில்,  உயிரின வாழ்க்கைச் சூழலுக்குரிய ஆக்கப்பணி என்பது  மிக முக்கியப் பகுதியாகும். எதிர்காலத்தில் உயிரின வாழ்க்கைச் சூழலுக்குரிய ஆக்கப்பணியில் திபெத் மேலதிக சாதனைகளை பெறுவதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மேலதிக பங்காற்றும்.

தகவல்-சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com