கரோனா என்பது புரளி: லண்டனில் எதிர்ப்புக் கூட்டம்  பியர்ஸ் கார்பைனுக்கு அபராதம்
கரோனா என்பது புரளி: லண்டனில் எதிர்ப்புக் கூட்டம் பியர்ஸ் கார்பைனுக்கு அபராதம்

கரோனா என்பது புரளி: லண்டனில் எதிர்ப்புக் கூட்டம் நடத்திய பியர்ஸ் கார்பைனுக்கு அபராதம்

இங்கிலாந்தில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் கரோனா தொற்று மற்றும் பொதுமுடக்க விதிகளுக்கு எதிராகக் கூட்டம் கூட்டிய தொழிலாளர் கட்சி முன்னாள் தலைவரின் சகோதரர் பியர்ஸ் கார்பைனுக்கு அந்நாட்டுக் காவல்துறை அபராதம

இங்கிலாந்தில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் கரோனா தொற்று மற்றும் பொதுமுடக்க விதிகளுக்கு எதிராகக் கூட்டம் கூட்டிய தொழிலாளர் கட்சி முன்னாள் தலைவரின் சகோதரர் பியர்ஸ் கார்பைனுக்கு அந்நாட்டுக் காவல்துறை அபராதம் விதித்துள்ளது.

டிராஃபல்கர் சதுக்கத்தில் கரோனா தொற்று என்பது வெறும் புரளி என்பதை வலியுறுத்தி கூட்டம் கூட்டிய குற்றத்துக்காக ஜெரினி கார்பைனின் சகோதரரான பியர்ஸ் கார்பைனுக்கு (73) 10 ஆயிரம் யூரோக்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

வானியல் நிபுணரான பியர்ஸ் கார்பைன், பொதுமுடக்க விதிகளுக்கு எதிரான கருத்துக் கொண்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்களை கொண்டு 'கூடுவது தங்கள் உரிமை' என்ற அழைப்புடன் சனிக்கிழமை இரவு டிராஃபல்கர் சதுக்கத்தில் கூட்டத்தை நடத்தினார்.

இந்த கூட்டத்தைக் கூட்டியதற்காக அவர் 10 மணி நேரம் காவலில் வைக்கப்பட்டிருந்ததையும், அபராதம் விதிக்கப்பட்டதையும் சுட்டுரைப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

இங்கிலாந்து முழுவதும் 30க்கும் மேற்பட்டோர் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு, அதிக அபராதம் விதிக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த விதிமுறையை எதிர்த்து இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ததாக மேலும் 4 பேருக்கும் தலா 10 ஆயிரம் யூரோக்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் தங்களது இசைக் கருவிகளுடன் பங்கேற்ற இசைக் கலைஞர்களின் லட்சக்கணக்கான மதிப்புள்ள இசை கருவிகள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கரோனா காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு, பொதுமுடக்க விதிகளை எதிர்த்து கூட்டம் கூட்டியதற்காக கார்பைன் கைது செய்யப்படுவது இது மூன்றாவது முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பொது முடக்க விதிகளுக்கும், முகக்கவசம் அணிவதற்கும் எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்திருந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com