சீனப் பொருளாதார மீட்சி மீதான நம்பிக்கை மேம்பாடு

இவ்வாண்டு, புதிய ரக கரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும அறைகூவல்களைச் சமாளித்துள்ள சீனப் பொருளாதாரம்,  விடாப்பிடியான மற்றும் உள்ளார்ந்த ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளது.
Improving confidence in China's economic recovery
Improving confidence in China's economic recovery

இவ்வாண்டு, புதிய ரக கரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும அறைகூவல்களைச் சமாளித்துள்ள சீனப் பொருளாதாரம்,  விடாப்பிடியான மற்றும் உள்ளார்ந்த ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளது. உலகின் சில தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், சீனப் பொருளாதாரத்தின் எதிர்காலம் மீது அதிக நம்பிக்கை கொள்வதோடு, சீனப் பொருளாதாரம் நிலையான வளர்ச்சியை நனவாக்குவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின்  சி.என்.பி.சி உலகளாவிய  தலைமை நிதி அதிகாரிகள் மன்றம் 28ஆம் நாள் வெளியிட்ட 3ஆவது காலாண்டு ஆய்வு அறிக்கையில், அமெரிக்கப் பொருளாதாரத்தை விட, சீனப் பொருளாதார எதிர்காலம் மீது உலகின் முதன் நிதி அதிகாரிகளின் நம்பிக்கை அதிகம் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழ் வெளியிட்ட கட்டுரையில், சீன மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்புவதுடன், சீனப் பொருளாதாரம் வலுவாக மீட்சி அடைந்து வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உலகின் மிகப் பெரிய சுரங்க தொழில் நிறுவனமான பி.எச்.பி. பில்லிடன் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மைக் ஹென்றி, சி.என்.பி.சி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில்,  “வி” வடிவிலான மாற்றத்துடன் சீனப் பொருளாதாரம் மீட்சி அடைந்து வருகிறது என குறிப்பிட்டார்.

தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தர்வர்களைத் தவிர்த்து, பல சர்வதேச அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள், சீனப் பொருளாதாரத்தின் முன்மதிப்பீட்டை உயர்த்தியுள்ளன. இதில், மூடிஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட புதிய அறிக்கையில், 2020ஆம் ஆண்டு சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திப் மதிப்பின் மதிப்பீட்டை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல்- சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com