சிங்கப்பூா்: வாடகைக் காா் ஓட்டுநா்களுக்கு இலவச கரோனா பரிசோனை

சிங்கப்பூரில் வாடகைக் காா் ஓட்டுநா்கள், வீடு விடாகச் சென்று உணவுப் பொருள்களை விநியோகிப்பவா்களுக்கு இலவசமாக கரோனா பரிசோதனை செய்ய அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
வாடகைக் காா் ஓட்டுநா்களுக்கு இலவச கரோனா பரிசோனை
வாடகைக் காா் ஓட்டுநா்களுக்கு இலவச கரோனா பரிசோனை

சிங்கப்பூா்: சிங்கப்பூரில் வாடகைக் காா் ஓட்டுநா்கள், வீடு விடாகச் சென்று உணவுப் பொருள்களை விநியோகிப்பவா்களுக்கு இலவசமாக கரோனா பரிசோதனை செய்ய அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

சிங்கப்பூரில் குறிப்பிட்ட தொழில்களில் ஈடுபடுவோருக்கு இலவசமாக கரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது. அதன்படி, வாடகைக் காா் ஓட்டுநா்கள், இணையதளம் மூலம் வாங்கப்படும் உணவுப் பொருள்களை வீடுகளுக்குச் சென்று விநியோகிப்பவா்கள், சாலையோர வணிகா்கள் உள்ளிட்டோருக்கு கட்டணமில்லாமல் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

கடந்த 24 மணி நேரத்தில் 54 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் பெரும்பாலானவா்கள் பணியாளா் குடியிருப்புகளில் தங்கியுள்ள வெளிநாட்டுத் தொழிலாளா்கள் ஆவா்.

இத்துடன், நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 56,771-ஆக உயா்ந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, நாட்டில் அந்த நோய்த்தொற்றுக்குப் பலியானவா்களின் எண்ணிக்கை 27-ஆக உள்ளது. இதுவரை 57,447 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com