கரோனா: புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள கலிபோர்னியா

கலிபோர்னியாவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
கரோனா: புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள கலிபோர்னியா

கலிபோர்னியாவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவில் இதுவரை சுமார் 12 லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 19,121 பேர் உயிரிழந்துள்ளனர். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7,415 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சுமார் 1,700 க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, அமெரிக்காவில் நவம்பர் 20 அன்று ஒருநாள் பாதிப்பு 1,96,000 ஆக இருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 2 லட்சத்துக்கும் அதிகமாக பதிவானது. இதனால் நாட்டில் மொத்த பாதிப்பு 1.3 கோடியைத் தாண்டியுள்ளது. மேலும் 2,65,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கட்டுப்பாடுகளை மீறி நன்றி கூறும் நிகழ்வுக்காக மக்கள் ஒன்றுகூடுவதால் அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 
அதன் ஒரு பகுதியாக சான் பிரான்சிஸ்கோவின் புகழ்பெற்ற கோல்டன் கேட் பூங்கா மற்றும் அனைத்து வகையான அருங்காட்சியகங்களும் மூடப்பட்டுள்ளன. 

அதேபோன்று கலிபோர்னியாவின் புகழ்பெற்ற வரலாற்று அருங்காட்சியகமும் திறக்கப்பட்ட ஒரு மாதத்தில் மீண்டும் மூடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com