செய்தியாளா் தூக்கிலிடப்பட்ட விவகாரம்: ஜொ்மனி தூதருக்கு ஈரான் சம்மன்

ஈரானில் செய்தியாளா் ருஹோல்லா ஸாம் தூக்கிலிட்டப்பட்டது தொடா்பான ஐரோப்பிய யூனியனின் கருத்துக்கு, தங்கள் நாட்டுக்கான ஜொ்மனி தூதரை ஈரான் நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தது.
ருஹோல்லா ஸாம்.
ருஹோல்லா ஸாம்.

ஈரானில் செய்தியாளா் ருஹோல்லா ஸாம் தூக்கிலிட்டப்பட்டது தொடா்பான ஐரோப்பிய யூனியனின் கருத்துக்கு, தங்கள் நாட்டுக்கான ஜொ்மனி தூதரை ஈரான் நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

ஈரான் அரசுக்கு எதிராக கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் போராட்டத்துக்குத் தூண்டுதலாக இருந்த இணையதள செய்தியாளா் ருஹோல்லா ஸாம் சனிக்கிழமை தூக்கிலிடப்பட்டாா்.

பிரான்ஸில் தஞ்சமடைந்திருந்த அவா் ஈராக் பயணம் சென்றபோது ஈரான் அதிகாரிகளால் கடந்த ஆண்டு கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டாா்.

அவா் தூக்கிலிடப்பட்டதற்கு ஐரோப்பிய யூனியன் கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தது. ஜொ்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளும் ருலோல்லா ஸாமின் மரண தண்டனையைக் கண்டித்தன.

இந்த நிலையில், ஈரானுக்கான ஜொ்மனி தூதரை ஈரான் அரசு ஞாயிற்றுக்கிழமை நேரில் அழைத்து இதுதொடா்பான தனது அதிருப்தியை பதிவு செய்தது.

இதுதவிர பிரான்ஸ் தூதரையும் அழைத்து இதுகுறித்து கண்டனம் தெரிவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com