நிலவுப் பாறைகளுடன் பூமிக்குப் புறப்பட்டது சீன விண்கலம்

நிலவுக்கு சீனா அனுப்பிய விண்கலம், அங்கிருந்து பாறைகள் மற்றும் பிற பொருள்களுடன் பூமியை நோக்கிப் புறப்பட்டது.
நிலவுப் பாறைகளுடன் பூமிக்குப் புறப்பட்டது சீன விண்கலம்

நிலவுக்கு சீனா அனுப்பிய விண்கலம், அங்கிருந்து பாறைகள் மற்றும் பிற பொருள்களுடன் பூமியை நோக்கிப் புறப்பட்டது.

இதுகுறித்து சீன தேசிய விண்வெளி ஆய்வு அமைப்பு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நிலவைச் சுற்றி வந்துகொண்டிருந்த சாங்கி-5 விண்கலத்தின் பாதை பூமியை நோக்கி ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பப்பட்டது.

அந்த விண்கலத்திலிருந்த 4 என்ஜின்கள் 22 நிமிடங்களுக்கு இயக்கப்பட்டதில், அதன் சுற்றுவட்டப் பாதை பூமியை நோக்கித் திரும்பியது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலவிலிருந்து கற்கள், பாறைகளை பூமிக்குக் கொண்டு வந்து ஆய்வுகள் மேற்கொள்வதற்கான சீனாவின் சாங்கி-5 விண்கலம், கடந்த மாதம் 24-ஆம் தேதி வெற்றிகரமாக ஏவப்பட்டது.

அமெரிக்கா, ரஷியாவுக்கு அடுத்தபடியாக இத்தகைய திட்டத்தை 50 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா நிறைவேற்றி வருகிறது.

கடந்த 1-ஆம் தேதி நிலவில் சாங்கி-5 ஆய்வுக்கலம் பத்திரமாகத் தரையிறங்கியது. அங்கு கற்கள், பாறைகள் போன்றவற்றை சேகரித்த அந்த ஆய்வுக் கலம் நிலவுப் பரப்பிலிருந்து 3-ஆம் தேதி புறப்பட்டு, நிலவைச் சுற்றிக் கொண்டிருந்த விண்லத்துடன் கடந்த வாரம் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com