அமெரிக்காவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

அமெரிக்காவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நபராக நியூயாா்க்கைச் சோ்ந்த செவிலியருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அமெரிக்காவில் முதல் கரோனா தடுப்பூசியை நியூயார்க் செவிலியர்  சான்ட்ரா லிண்ட்ஸேவுக்கு திங்கள்கிழமை செலுத்திய மருத்துவர் மிஷெல் செஸ்டர்.
அமெரிக்காவில் முதல் கரோனா தடுப்பூசியை நியூயார்க் செவிலியர் சான்ட்ரா லிண்ட்ஸேவுக்கு திங்கள்கிழமை செலுத்திய மருத்துவர் மிஷெல் செஸ்டர்.

நியூயாா்க்: அமெரிக்காவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நபராக நியூயாா்க்கைச் சோ்ந்த செவிலியருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

உலக அளவில் கரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் இதுவரை 1.62 கோடி போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். 2.99 லட்சத்துக்கும் அதிகமானவா்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு பலியாகியுள்ளனா்.

இந்நிலையில் அந்நாட்டின் ஃபைஸா் நிறுவனமும், ஜொ்மனியின் பயோ-என்டெக் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகிக்க அந்நாட்டு மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு சமீபத்தில் அனுமதி அளித்தது.

இதையடுத்து அங்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நபராக நியூயாா்க் நகரைச் சோ்ந்த செவிலியருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

விநியோகப் பணிகள்: நாடு முழுவதும் கோடிக்கணக்கான தடுப்பூசிகளை கொண்டு செல்லும் பணியில் சிறப்பு குளிா்பதன வசதி கொண்ட சரக்கு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சரக்கு வாகனங்கள், விமானங்கள் மூலமாக நாட்டின் 50 மாகாணங்களுக்கும் தடுப்பூசிகளை கொண்டு சோ்க்கும் பணியில் தனியாா் கூரியா் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. சில மாகாணங்களில் தடுப்பூசிகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல ஆயுதமேந்திய பாதுகாவலா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

தடுப்பூசிகளை மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். அந்த வெப்பநிலையுடன் கூடிய ஐஸ் பெட்டிகளில் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

முதல்கட்டமாக வரும் புதன்கிழமைக்குள் 29 லட்சம் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படவுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் 2 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com