கரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: சர்வதேச விமானச் சேவையை ரத்து செய்யும் நாடுகள்

பிரிட்டனில் மீண்டும் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, லண்டனுக்கான விமானச் சேவையை கனடா முழுவதுமாக ரத்து செய்துள்ளது.
கரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக அறிவித்த கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கனடாவின் மான்ட்ரியால் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
கரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக அறிவித்த கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கனடாவின் மான்ட்ரியால் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.


டோராண்டோ: பிரிட்டனில் மீண்டும் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, லண்டனுக்கான விமானச் சேவையை கனடா முழுவதுமாக ரத்து செய்துள்ளது. இதுபோல பிரான்ஸ் உள்ளிட்ட மேலும் பல நாடுகள் லண்டனுக்கு பயணம் மேற்கொள்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

பிரிட்டனில் கடந்த சில நாள்களாக மீண்டும் கரோனா தொற்றின் பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து, அங்கு மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தலைநகர் லண்டன் மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் கரோனா தொற்றின் புதிய மாறுபாடு மற்றும் வடிவத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், "தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய வடிவத்திலான கரோனா வைரஸ், முந்தைய வைரûஸக் காட்டிலும் வேகமாகப் பரவக் கூடியது. ஆனால், இந்த புதிய கரோனா வைரஸ் மிக அதிக பாதிப்புகளை ஏறபடுத்தும் என்பதற்கான ஆதாரங்கள் எதுளம் இல்லை. இருந்தபோதும், தெற்கு பிரிட்டன் பகுதியில் மக்கள் ஓரிடத்தில் அதிகமாகக் கூடுவதும், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மக்கள் கடைக்குச் செல்வதையும் தவிர்க்க வேண்டும்' என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த புதிய பாதிப்பைத் தொடர்ந்து, பிரிட்டனுக்கான விமானச் சேவையை கனடா முழுமையாக ரத்து செய்தது. அதுபோல, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, பெல்ஜியம், ஆஸ்திரியா, அயர்லாந்து, பல்கேரியா போன்றநாடுகளும் பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்ள கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளன.

சவூதி அரேபியா விமானச் சேவை ரத்து: 
புதிய மாறுபாடு மற்றும் வடிவிலான கரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து சர்வதேச விமானச் சேவையை சவூதி அரேபி தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

இதுகுறித்து அந் நாட்டு உள்துறை அமைச்சர் கூறுகையில், "ஒரு வார காலத்துக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ள சர்வதேச விமானச் சேவை, புதிய வடிவிலான கரோனா வைரஸின் மருத்துவத் தகவல்களில் தெளிவடைகின்ற வரை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் ஐரோப்பிய நாடுகள் வழியாக யாரும் பயணம் செய்து வந்திருந்தால், அவர்கள் உடனடியாக கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விமானச் சேவை ரத்து நடவடிக்கையால், சரக்குப் போக்குவரத்துக்கு பாதிப்பு இருக்காது' என்று கூறினார்.

பாகிஸ்தானியர்களுக்கு விசா கட்டுப்பாடு -யுஏஇ ஒப்புதல்: 
பல நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து, வெளிநாட்டு பயணிகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக, பாகிஸ்தான், லெபனான், கென்யா, ஈரான், சிரியா, ஆப்கானிஸ்தான், ஏமன் உள்பட முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் 12 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு யுஏஇ கடுமையான விசா கட்டுப்பாடுகளை விதித்திருப்பதாக பயண ஏற்பாட்டு முகவர்கள் கூறி வந்தனர். இதை யுஏஇ வெளியுறளத் துறை அமைச்சர் ஷேக் அப்துல் பின் சையது அல் நஹ்யான் திங்கள்கிழமை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

 கரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக இந்தக் கட்டுப்பாடுகள் தற்காலிகமாக விதிக்கப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் வெளியுறளத் துறை அமைச்சர் உடனான ஆலோசனையின்போது யுஏஇ வெளியுறளத் துறை அமைச்சர் தெரிவித்தார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com