பெரு: 10 லட்சத்தைக் கடந்த பாதிப்பு

மேற்கு தென் அமெரிக்கரிக்க நாடான பெருவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது.
peru084405
peru084405


லீமா: மேற்கு தென் அமெரிக்கரிக்க நாடான பெருவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

வெறும் 3.2 கோடி மக்கள்தொகையைக் கொண்ட பெருவில், கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதன் மூலம், அந்த எண்ணிக்கையைத் தாண்டிய 5-ஆவது லத்தீன் அமெரிக்க நாடாக பெரு ஆகியுள்ளது.

ஐரோப்பாவில் கரோனா பரவுவதாக தகவல் வெளியான உடனேயே, பெருவில் மிகத் துரிதமாக கடந்த மாா்ச் மாதமே பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. 6 மாதங்களாக விமான நிலையங்கள் மூடப்பட்டு, பொதுமக்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டாலும், அந்த நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் திணறி வந்தனா்.

இந்தச் சூழலில், செவ்வாய்க்கிழமை மட்டும் கூடுதலாக 1,678 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அத்துடன், நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10,00,153-ஆக உயா்ந்துள்ளது.

புதன்கிழமை நிலவரப்படி, பெருவில் 37,218 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா். இதுவரை அந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த 9,36,182 போ் அதிலிருந்து முழுமையாக குணமடைந்தனா். 26,753 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 1,111 பேரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com