‘டிரம்பின் எதிர்காலம் இனி சிறப்பாக இருக்கப்போவதில்லை’: ஈரான் அதிபர்

அமெரிக்க அதிபர் டிரம்பை இராக் முன்னாள் அதிபர் சதான் உசேனுடன் ஒப்பிட்டு அவரின் எதிர்காலம் இனி சிறப்பாக இருக்கப்போவதில்லை என ஈரான் அதிபர் ரூஹானி விமர்சனம் செய்துள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஈரான் நாட்டின் ராணுவத் தளபதி சுலைமானி அமெரிக்கப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதன்காரணமாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் போக்கு தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி, “ஈரான் தனது வரலாற்றில் இரண்டு மனநலம் பாதித்தவர்களை சமாளிக்க வேண்டி இருந்தது. ஒருவர் சதாம் உசேன். மற்றொருவர் டொனால்ட் டிரம்ப்” எனத் தெரிவித்தார்.

ஒருவர் ராணுவப் போரிலும், மற்றொருவர் பொருளாதாரப் போரிலும் ஈடுபட்டதாகத் தெரிவித்த ரூஹானி அமெரிக்க அதிபர் டிரம்பின் எதிர்காலம் இனி சிறப்பாக இருக்கப்போவதில்லை எனத் தெரிவித்தார்.

இஸ்லாமிய குடியரசிற்கு எதிரான பிரசாரத்திற்கு தலைமை தாங்கிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியில் இருந்து விலகியது குறித்து ஈரான் மிகவும் மகிழ்ச்சியடைவதாக டிசம்பர் மாதத் தொடக்கத்தில் ஹசன் ரூஹானி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com