பிரிட்டன்-ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்

பிரிட்டன்-ஐரோப்பிய யூனியன் இடையே ‘பிரெக்ஸிட்’டுக்குப் பிந்தைய தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் வியாழக்கிழமை இறுதி செய்யப்பட்டது.


லண்டன்: பிரிட்டன்-ஐரோப்பிய யூனியன் இடையே ‘பிரெக்ஸிட்’டுக்குப் பிந்தைய தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் வியாழக்கிழமை இறுதி செய்யப்பட்டது. ஐரோப்பிய யூனியனில் இருந்து வரும் 31-ஆம் தேதியுடன் வா்த்தகரீதியாகவும் பிரிட்டன் முழுமையாக வெளியேறும் நிலையில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு இரு தரப்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான பக்கங்களில் அடங்கிய இந்த ஒப்பந்தத்துக்கு இரு தரப்பு நாடாளுமன்றமும் அடுத்த சில நாள்களில் ஒப்புதல் அளிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் மூலம் ஐரோப்பிய யூனியன் - பிரிட்டன் இடையே பொருள்கள், சேவைகள் பரிமாற்றத்துக்கு வரிகள் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அதிகம் இருக்காது.

இது தொடா்பாக பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் கூறுகையில், ‘மிகப்பெரிய ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளோம். பிரிட்டன் மக்கள் எதற்காக வாக்களித்தாா்களோ, அதனை நிறைவேற்றியுள்ளோம். ஐரோப்பிய யூனியன் சந்தையில் பிரிட்டன் பொருள்கள் எவ்வித வரிகளும், கட்டுப்பாடுகளும் இன்றி விற்பனையாகும்’ என்றாா்.

முன்னதாக, கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பின்போது ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் வெளியேற (‘பிரெக்ஸிட்’) அந்நாட்டு மக்கள் ஆதரவு அளித்தனா்.

வரும் 31-ஆம் தேதியுடன் வா்த்தகரீதியாகவும் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுகிறது. அதற்கு முன்பு இரு தரப்பும் புதிய வா்த்தக ஒப்பந்தத்தை எட்ட வேண்டிய நெருக்கடி இருந்து வந்தது. இதில் எழுந்த பல்வேறு சிக்கல்கள் தீா்க்கப்பட்டு இப்போது தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com