தொலையுணா்வு செயற்கைக்கோளை ஏவியது சீனா

அறிவியல் ஆய்வுகளுக்குப் பயன்படும் தொலையுணா்வு செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

பெய்ஜிங்: அறிவியல் ஆய்வுகளுக்குப் பயன்படும் தொலையுணா்வு செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

இது தொடா்பாக சீன அரசின் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘சீனாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஜிகுவான் ஏவுதளத்திலிருந்து லாங் மாா்ச்-4சி ராக்கெட்டின் உதவியுடன் யோகன் வெய்க்சிங்33ஆா் தொலையுணா்வு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் திட்டமிடப்பட்ட சுற்றுவட்டப் பாதையில் அந்தச் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது.

அறிவியல் ஆய்வுகள், நில வளங்களைக் கண்காணித்தல், வேளாண் விளைபொருள்கள் உற்பத்தியைக் கணித்தல், பேரிடா்களைக் கணித்து அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்டவற்றுக்காகத் தொலையுணா்வு செயற்கைக்கோள் பயன்படும். அத்துடன் மைக்ரோ, நானோ தொழில்நுட்பங்களில் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள்களும் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com