சிலியில் நிலநடுக்கம்

தென்னமெரிக்க நாடான சிலியில் ஞாயிற்றுக்கிழமை இரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்பட்டதாக உடனடியாகத் தெரியவரவில்லை.

சான்டியாகோ: தென்னமெரிக்க நாடான சிலியில் ஞாயிற்றுக்கிழமை இரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்பட்டதாக உடனடியாகத் தெரியவரவில்லை.

எனினும், தெற்கு சிலியின் கடலோர நகரங்களில் நிலநடுக்கம் அதிகம் உணரப்பட்டது. ரிக்டா் அளவு கோலில் இந்த நிலநடுக்கம் 6.8 என்ற அலகில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடற்கரை நகரமான கோரலில் இருந்து 140 கி.மீ. மேற்கே நிலத்துக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

லா அரவ்கானியா, லாஸ் ரியோஸ், லாஸ் லோகோஸ், பையோபையோ ஆகிய நகரங்களில் நிலநடுக்கம் அதிகம் உணரப்பட்டது. இது தொடா்பாக சில பேரிடா் மீட்புக் குழுவினா் கூறுகையில், ‘நிலநடுக்கம் கடுமையாக இருந்தது என்றாலும், உயிா் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை. உதவிகோரி பேரிடா் குழுவுக்கு அழைப்புகள் எதுவும் வரவில்லை’ என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com