டேட்டிங் ஆபத்து:  டிண்டர் செயலின் புதிய முயற்சி

டேட்டிங் ஆபத்து:  டிண்டர் செயலின் புதிய முயற்சி

இளைஞர்களிடையே பிரபலமான டிண்டர் செயலி தற்போது அதன் பயனர்களுக்கான பாதுகாப்பு முயற்சியில் இறங்கியுள்ளது.

இளைஞர்களிடையே பிரபலமான டிண்டர் செயலி தற்போது அதன் பயனர்களுக்கான பாதுகாப்பு முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாகப் பயனர்கள், குறிப்பாக பெண்கள் ஏதேனும் எதிர்பாராத சூழ்நிலையில் சிக்கினால், அதிகாரிகளை எச்சரிக்க, செயலியின் பயன்பாட்டில் அலார்ம் பட்டனைச் இணைத்துள்ளதாக டிண்டர் அண்மையில் அறிவித்துள்ளது. டேட்டிங்கில் பிரச்னை அல்லது எதிர்பாராத சங்கடம் ஏற்பட்டால் உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளலாம் என்கிறது இந்தச் செயலி.

டிண்டரின் இந்தப் புதிய அம்சத்தால், பயனர்கள் ஏதேனும் ஆபத்தில் சிக்கினால் அவசர சேவைகளுக்கு புத்திசாலித்தனமாக உதவி அழைக்க முடியும்.

இந்த திட்டத்தைச் செயல்படுத்த, இணையப் பாதுகாப்பு தளமான நூன்லைட் என்ற நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது டிண்டர்.

புதிய அம்சத்தைப் பற்றி கூறுகையில், நூன்லைட் பிரிட்டானி லீகாம்ட்டின் இணை நிறுவனர் மற்றும் சி.சி.ஓ கூறியது: "நீங்கள் தனியாக இருக்கும் போது அல்லது முதல் முறையாக ஒருவரைச் சந்திக்கும் சூழ்நிலைகளில், நூன்லைட் கண்ணுக்குத் தெரியாத மெய்க்காப்பாளராக செயல்படும். இப்போது, டிண்டருடனான எங்கள் ஒருங்கிணைப்பின் மூலம், டேட்டிங் செல்பவர்களுக்கான பாதுகாப்பை நிறுவுகிறது. டேட்டிங் சமயத்தில் மோசமான நடத்தையைத் தடுக்கவும், பயனர்களை ஒருவரை ஒருவர் அதிக நம்பிக்கையுடன் சந்திக்க  உதவும்.  

இந்தப் புதிய பட்டன் சேர்க்கப்பட்டதும், பயனர்கள் தங்களின் இருப்பிடம், நேரம் மற்றும் அடுத்தடுத்த டேட்டிங் தேதிகள் போன்ற தகவல்களையும் சேர்க்க முடியும்.

இந்தக் கூடுதல் பாதுகாப்பு வசதியுடன், டேட்டிங் செல்லும் பயனரின் சுயவிவரத்தில் நீல நிற டிக் பெறுவதற்காக, புகைப்படத்தை சரி பார்க்கும் வசதியையும் அறிமுகப்படுத்துகிறது. செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டின் மூலம், இந்த வகை சரிபார்ப்பு கேட்ஃபிஷிங்கைக் கட்டுப்படுத்தும்.

டிண்டர் தலைமை நிர்வாக அதிகாரி எலி சீட்மேன் கூறுகையில்: "ஒவ்வொரு நாளும், மில்லியன் கணக்கான உறுப்பினர்கள் புதிய நபர்களுக்கு அறிமுகமாக விரும்புகிறார்கள், மேலும் இன்றைய இளைஞர்களின் டேட்டிங் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக மிகச் சிறந்த தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் புதுமையான பாதுகாப்பு அம்சங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.’

"இந்தப் புதிய அம்சங்களுடனான செயலியைப் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன், இது எங்கள் பாதுகாப்புப் பணிகளை ஒப்பிடமுடியாத அளவில் முன்னெடுப்பதில் முக்கியமான பங்கு வகிக்கிறது" என்று எலி மேலும் கூறினார்.

இந்தப் புதுப்பிக்கப்பட்ட செயலி, ஆண்டின் பிற்பகுதி வரை பரவலாக கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com