ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை பாராட்டிய பிரபல தமிழ் நடிகை

வெவ்வேறு துறைகளில் பிரபலமாகத் திகழும் 30 வயதுக்குள் இருக்கும் டாப் இந்தியர்களின் பட்டியலை அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான ஃபோர்ப்ஸ் அண்மையில் வெளியிட்டது.
ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை பாராட்டிய பிரபல தமிழ் நடிகை

வெவ்வேறு துறைகளில் பிரபலமாகத் திகழும் 30 வயதுக்குட்பட்ட டாப் இந்தியர்களின் பட்டியலை அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான ஃபோர்ப்ஸ் அண்மையில் வெளியிட்டது. இந்த  டாப் 30 இந்தியர்கள் பட்டியலில் இடம்பிடித்த ஒரே நடிகை என்ற பெருமையைப் பெற்றுள்ளார் நடிகை சாய் பல்லவி. இவர் பொழுதுபோக்கு துறை என்ற பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் இவர், தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களைத் தேர்ந்து எடுத்து நடிக்கிறார்' எந்த மொழியில் நடித்தாலும் அதில் வித்தியாசமான கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார். கணக்கு வகுப்பிலிருந்து தப்பிக்க ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே சினிமாவுக்கு வந்துவிட்டதாகக் கூறியுள்ளார் சாய் பல்லவி.

இது குறித்து சாய் பல்லவி கூறுகையில், நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். எனக்கு நடிப்பு பற்றி எதுவுமே தெரியாது. அது மட்டுமல்லாமல் திரையுலகம் குறித்த எந்தவிதமான முன் அனுபவமும் இல்லாத எனக்கு ரசிகர்கள் தந்த ஆதரவு நம்பிக்கையை விதைத்தது’ என்றார்.

தற்போது நாக சைதன்யாவுக்கு ஜோடியாக சேகர் கம்மலா இயக்கத்தில் லவ் ஸ்டோரி என்ற படத்தில்  நடித்து வருகிறார் சாய் பல்லவி. இந்தப் படம் சம்மர் ஸ்பெஷலாக ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com