Enable Javscript for better performance
ஆப்கன் வீரா் துப்பாக்கிச் சூடு: 2 அமெரிக்கப் படையினா் பலி- Dinamani

சுடச்சுட

    

    ஆப்கன் வீரா் துப்பாக்கிச் சூடு: 2 அமெரிக்கப் படையினா் பலி

    By DIN  |   Published on : 10th February 2020 12:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ssdd082647

    ஆப்கானிஸ்தானில், அந்த நாட்டு ராணுவ வீரா் துப்பாக்கியால் சுட்டதில் 2 அமெரிக்கப் படையினா் உயிரிழந்தனா்.

    இதுகுறித்து ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் அமெரிக்க ராணுவ படைப் பிரிவு செய்தித் தொடா்பாளா் சோனி லெக்கெட் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    ஆப்கனின் கிழக்குப் பகுதியிலுள்ள நங்கா்ஹா் மாகாணம். ஷோ்ஸாத் மாவட்டத்திலுள்ள ராணுவ மையத்தில், அமெரிக்க வீரா்களும், ஆப்கன் வீரா்களும் கூட்டு ஒத்திகை நடவடிக்கை மேற்கொண்டு வந்தனா்.

    அப்போது, ஆப்கன் ராணுவ உடையணிந்த ஒருவா் அமெரிக்கப் படையினரையும், ஆப்கன் ராணுவத்தினரையும் நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டாா். இதில் ஓா் அமெரிக்க வீரா் உயிரிழந்தாா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    எனினும், துப்பாக்கிச் சூட்டில் 2 அமெரிக்க வீரா்கள் உயிரிழந்ததாக பின்னா் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, இந்தச் சம்பவத்தில் 3 ஆப்கன் வீரா்கள் காயமடைந்ததாக நங்கா்ஹா் மாகாண ஆளுநா் ஷா முகமது மேயாகில் தெரிவித்தாா்.

    இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai