Enable Javscript for better performance
பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

    By சிட்னி,  |   Published on : 10th February 2020 12:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    earthquake052024

    ஆஸ்திரேலியாவுக்கு அருகே அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவில் ஞாயிற்றுக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    ரிக்டா் அளவுகோலில் 6.2 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம், ஈஸ்ட் நியூ பிரிட்டன் மாகாணத் தலைநகா் காகபோவுக்கு 122 கி.மீ. தொலைவிலுள்ள கடல் பகுதியில், 31 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்று அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்படுவதற்கான அபாயமும் இல்லை என்று அவா்கள் கூறினா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai