லண்டன் முதல் நியூயார்க் வரை 5 மணிநேரத்துக்குள் சென்று பயணிகள் விமானம் சாதனை!

பயணிகள் விமானப் பயணத்திலேயே முதன்முறையாக அட்லான்டிக் பகுதியை பிரிட்டீஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் 5 மணி நேரத்துக்குள்ளாகக் கடந்து சாதனைப் படைத்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

பயணிகள் விமானப் பயணத்திலேயே முதன்முறையாக அட்லான்டிக் பகுதியை பிரிட்டீஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் 5 மணி நேரத்துக்குள்ளாகக் கடந்து சாதனைப் படைத்துள்ளது.

பிரிட்டீஷ் ஏர்வேஸைச் சேர்ந்த போயிங் 747 பயணிகள் விமானம், ஞாயிற்றுக்கிழமை காலை லண்டன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு 4 மணிநேரம் 56 நிமிடங்களில் பயண தூரத்தைக் கடந்து நியூயார்க் கென்னடி சர்வதேச விமான நிலையத்துக்குச் சென்றடைந்தது. இருப்பினும் வேகத்தை விட பயணிகளின் பாதுகாப்பு தான் தங்களுக்கு முக்கியம் என பிரிட்டீஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் அட்லான்டிக் பயண தூரப் பகுதியை 5 மணிநேரத்துக்குள்ளாகக் கடந்த முதல் பயணிகள் விமானம் எனும் சாதனையைப் படைத்தது. முன்னதாக நார்வே விமானம் இந்தப் பயண தூரத்தை 5 மணிநேரம் 13 நிமிடங்களில் கடந்தது சாதனையாக இருந்தது. 

லண்டன் முதல் நியூயார்க் வரையிலான விமானப் பயண தூரம் சராசரியாக 6 மணிநேரம் 13 நிமிடங்கள் ஆகும். குறிப்பாக குளிர்காலங்களில் விமானங்கள் தாழ்வாக இயக்கப்படுகிறது. இதனை சில விமானங்கள் பயன்படுத்தி வேகமாக இயக்கப்படுகிறது.

சிறிய ரக சூப்பர்ஸானிக் கான்கார்ட் விமானங்கள் இந்த குறிப்பிட்ட தூரத்தை 3 மணிநேரத்துக்குள் கடந்து சென்றன. ஆனால், 2003 முதல் அவை இயக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com