சட்ட அமலாக்க எழுச்சியுடன் கரோனா வைரஸ் பாதிப்பைச் சமாளிக்கும் சீனா

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ஜின்பிங் அண்மையில் சட்டத்தின்படி நாட்டை ஆட்சி புரிவது..
சட்ட அமலாக்க எழுச்சியுடன் கரோனா வைரஸ் பாதிப்பைச் சமாளிக்கும் சீனா

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ஜின்பிங் அண்மையில் சட்டத்தின்படி நாட்டை ஆட்சி புரிவது பற்றிய கட்சியின் மத்தியக் குழுவின் மூன்றாவது கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, இதில் முக்கிய உரை நிகழ்த்தினார்.

தற்போது புதிய ரக கரோனா வைரஸ் தடுப்புப் பணி மிக முக்கிய தருணத்தில் இருக்கிறது. சட்டத்தின்படி தடுப்புப் பணியில் ஊன்றி நிற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

சீனா சட்ட அமலாக்க நாடாகும். சட்டத்தின்படி நாட்டை ஆட்சி புரிவது, சீனாவின் தேசிய அமைப்பு முறை மற்றும் தேசிய நிர்வாக முறைமையின் தலைசிறந்த மேம்பாடாகவும், கடும் பொதுச் சுகாதார சம்பவத்தைச் சமாளிப்பதில் அடிப்படை கோட்பாடாகவும் இருக்கின்றது. 

கடந்த சில ஆண்டுகளில், மருத்துவச் சிகிச்சை மற்றும் சுகாதாரத் துறையில் சட்டமியற்றலை சீனா வலுப்படுத்தி வருகின்றது. சமூகத்தில் கடும் சீர்குலைப்பை ஏற்படக்கூடிய நோய் மற்றும் சமூக அவசர சம்பவம் குறித்து சீனா பல சட்டங்கள் மற்றும் சட்டவிதிகளை வகுத்து, நோய்த் தடுப்பு மற்றும் அவசர நடவடிக்கைக்கு முழுமையான சட்ட உத்தரவாதத்தை வழங்கியுள்ளது. இது சர்வதேச சமூகத்தில் பொதுவான நடவடிக்கைக்குப் பொருந்தியதாக இருக்கின்றது.

திடீரென ஏற்படும் கடும் சம்பவத்தைச் சமாளிப்பதில் சீனா சட்ட அமலாக்க ஆக்கப்பணியை சீனா முன்னேற்றி, பயன்மிக்க நோய்த் தடுப்பு சட்ட அமைப்பு முறையை மேலும் உருவாக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com