சீனாவில் அதிகரித்து வருகிறது முக உறைகள் மற்றும் உணவுகளின் உற்பத்தி

சீனாவில் முக உறைகள், உணவுப் பொருட்கள் ஆகியற்றின் உற்பத்தி தற்போது படிப்படியாக அதிகரித்து வருகிறது.
சீனாவில் அதிகரித்து வருகிறது முக உறைகள் மற்றும் உணவுகளின் உற்பத்தி


சீனாவில் முக உறைகள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்தி தற்போது படிப்படியாக அதிகரித்து வருகிறது. 

கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி வரை முக உறைகளின் உற்பத்தித் திறன் 73 சதவீதமாக உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்களின் உற்பத்தித் திறன் 94.6 சதவீதத்திற்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

மேலும், இயற்கை வாயு, மின்னாற்றல், எண்ணெய் ஆகியவை போதுமான அளவில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. உள்நாட்டுப் பயணியர் விமானம், தொடர்வண்டி மற்றும் நீர்வழிப் போக்குவரத்து இயல்பாக இயங்கி வருகின்றன.

கடந்த 8ஆம் தேதி சீனாவின் 36 முக்கிய நகரங்களில் அரிசி, மாவு, சமையல் எண்ணெய் ஆகியவை இயல்பான விலையில் விற்கப்படுகிறது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com